சிக்கிமிலிருந்து ஜஸ்ட் 150 கி.மீ தூரத்தில்.. அதிநவீன போர் விமானங்களை நிறுத்திய சீனா! பரபர படம்
பீஜிங்: சிக்கிமில் இருந்து 150 கி.மீ தொலைவில் இந்திய எல்லைப்பகுதி அருகே ஜே 20 போர் விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது. திபெத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான சிகாட் சேவில் சீனாவின் 6 விமானங்கள் நிற்கும் படங்கள் வெளியிகியுள்ளன.
தெற்கு ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத நாடாக வர வேண்டும் என்பது சீனாவின் விருப்பமாக உள்ளது. சீனாவின் இந்த திட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இந்தியா உள்ளது. ஆசியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது.

இந்தியா சீனா பிரச்சினை: இதனால், இந்தியா மீது எரிச்சல் அடையும் சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு பூகோள ரீதியில் நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. இதற்காக இலங்கை, மாலத்தீவு உள்பட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு கடனை அள்ளி கொடுத்து வளைக்க முயன்று வருகிறது.
அதி நவீன போர் விமானங்கள்: இதேபோல், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் அந்த நாடுகளில் எல்லாம் சீனா தனது பல பில்லியன் மதிப்பில் தனது முதலீட்டை குவித்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் எல்லையிலும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது இந்திய எல்லைக்குள்ளும் அத்துமீறி அடாவடி செய்கிறது.

இந்த நிலையில் தான் சீனா தற்போது சிக்கிமிலிருந்து 150 கி.மீ தூரத்தில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. திபெத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான சிகாட் சேவில் சீனாவின் 6 விமானங்களும் நிற்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை என்டிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜே 20- போர் விமானம்: திபெத்தில் உள்ள இந்த விமான நிலையம் சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது. சீனாவிடம் இருக்கும் இந்த ஜே 20- போர் விமானம் மிகவும் அதி நவீனமானது ஆகும். இந்த போர் விமானங்களை சீனா தனது கிழக்குப் பகுதியில் அதிகம் பயன்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது சீனா, இந்தியாவுக்கு மிக நெருக்கமான இடத்தில் இந்த போர் விமானத்தை கொண்டு வந்துள்ளது.
கவனிக்கும் இந்தியா: சீனாவின் நவீன விமானங்கள் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது குறித்து இந்திய விமான படையும் நன்கு அறிந்து வைத்துள்ளது. எனினும் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து எதையும் இந்திய விமானப்படை தெரிவிக்கவில்லை . திபெத்தில் ஜே 20 விமானத்தை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால கட்டங்களில் சீனாவின் ஹோட்டான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங்கில் இந்த ஜெட் விமானங்கள் காணப்பட்டன. இருந்தாலும் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் சீனா போர் விமானத்தை இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
ரபேலை இறக்கிய இந்தியா: சீனாவின் இந்த நவீன ஜே 20 விமானத்திற்கு எதிர்கொள்ளும் விதமாக 36 ரபேல் விமானங்களை இந்தியா தனது படையில் சேர்த்துள்ளது. இதில் 8 விமானங்கள் தற்போது அமெரிக்காவில் கூட்டு பயிற்சிக்காக சென்றுள்ளன. சீன ஜே-20 தென்பட்ட ஷிகாட்சே, மேற்கு வங்காளத்தில் உள்ள ஹசிமாராவிலிருந்து (290 கிமீ தொலைவில் உள்ளது) இங்கு தான் இந்தியா தனது 16 ரஃபேல்களின் இரண்டாவது படைப்பிரிவைத் தளமாகக் கொண்டுள்ளது.
-
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
அமெரிக்காவின் ரகசிய ஆயுதம்.. இது தெரியாம விளையாட கூடாது! -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications