சேதமான வீடுகள்.. முடங்கிய ரயில் சேவை.. சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஷாக்கில் மக்கள்
பெய்ஜிங்: சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் என்பது டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இங்கு தான் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கி உள்ளன. இதனால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியதோடு, உருண்டு விழுந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் விரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும் காயமடைந்தவர்கள் எத்தனை பேர், யாராவது படுகாயம் அடைந்து உள்ளனரா? என்பது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை. இதற்கிடையே தான் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த தேசிய நிலஅதிர்வு மையத்தில் பதிவாகி உள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛சீனாவின் தெற்கு ஜின்ஜியாங்கில் நள்ளிரவு 11.39 மணிக்கு 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் நேற்றைய தினம் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 மணி முதல் 12 மணிக்குள் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications