சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... முழு வீச்சில் லாக்டவுன்- உலகம் முழுவதும் பரவுமோ?
பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல மாகாணங்கள் லாக்டவுனில் முடக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது.
2019-ம் ஆண்டு சீனாவில் இருந்துதான் கொரோனா எனும் வைரஸ் பரவியது. கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது கொடிய கொரோனா வைரஸ்.
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போதைய நிலையில் உலகின் பல பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் முழு வீச்சில் போடப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 458,522,138. கொரோனாவால் இதுவரை 6,066,045 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 391,588,537 பேர் மீண்டும் உள்ளனர். தற்போதைய நிலையில் தென்கொரியாவில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. தென்கொரியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு உருமாற்றம் அடைந்த நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் பல மாகாணங்களும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுனை முழு வீச்சில் அமல்படுத்தி இருக்கின்றன.
இதனால் உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்கிற அச்சம் உருவாகி உள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற நம்பிக்கையை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications