For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சிங்கபூர்: தைவான் மற்றும் தென் சீன கடல் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதாக கூறி மூக்கை நுழைப்பதை அமெரிக்கா நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுடன் போர் நடக்கும் பேராபத்து உள்ளது, அப்படி நடந்தால் அது உலகிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வேய் ஃபெங்ஹே எச்சரித்துள்ளார்.

தைவானில் சுயாட்சி மற்றும் ஜனநாயகம் மலர அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் விஷயத்தில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

China issuing a war warning to US not to meddle in security disputes over Taiwan and the South China Sea

குறிப்பாக சீனா தைவானை இணைக்கும் பகுதியில் அமெரிக்க கடற்படைகள் கப்பல்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக சீனா, அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருக்கிறது.இதனிடையே ஆசிய அளவிலான பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஷாங்கரி-லா பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடந்தது. இந்த ஷாங்கரி-லா பேச்சுவார்த்தையில் சனிக்கிழமையின் போது அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பார்ட்ரிக் ஸ்னாகன் பேசுகையில், ஆசியாவில் சீனாவின் தலையிடுகளை இனியும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என தெரிவித்தார்.

இன்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வேய் ஃபெங்ஹே பேசுகையில், "தைவான் விவகாரத்தில் எந்த நாடாவது தலையிட முயற்சி செய்தால், தைவானை காக்க இறுதியில் சண்டையிடுவது ஒரே வழியாக இருக்கும் என சீனா கருதுகிறது. சீனா தனது சுய பாதுகாப்பிற்காகவே ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் பாதுகாப்புக்காக தாக்குவதற்கும் சீனா தயங்காது.

இந்திய தூதரகத்தில் இப்தார் விருந்து... முகம் சுளிக்க வைத்த பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் இப்தார் விருந்து... முகம் சுளிக்க வைத்த பாகிஸ்தான் அதிகாரிகள்

சீனா எந்த நாட்டையும் முதலில் தாக்காது. எங்களை தாக்கினால் கண்டிப்பாக தாக்குவோம். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நடக்கும் அபாயம் உள்ளது. சீனா , அமெரிக்கா இடையே போர் நடந்தால் அது உலகிற்கு பேரழிவாக முடியும். வேய், சீனாவையும் தைவானையும் பிரிக்க யாராவது முயன்றால் பார்த்துக் கொண்டு சீன ராணுவம் சும்மா இருக்காது. நிச்சயம் ராணுவ ரீதியாக கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

English summary
China's Defence Minister issuing a war warning to US not to meddle in security disputes over Taiwan and the South China Sea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X