மீண்டும் மிரட்ட தொடங்கும் கொரோனா.. சீன நகரத்தில் முழு லாக்டவுன்.. ஒரே நேரத்தில் பலருக்கு பாதிப்பு
பெய்ஜிங்: கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்தமாகச் சீனா திணறி வருகிறது.
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை எந்தவொரு நாடும் இதுவரை முழுமையாக ஒழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரசுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது.
இருப்பினும், சீனா மட்டும் இன்னும் கூட ஜூரோ கோவிட் கொள்கையில் தீவிரமாக உள்ளது. தற்போது அங்குக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் தொடங்கி உள்ள நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு
இந்தச் சூழலில் சானாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகரில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டும் வெளியே வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பைஸ் நகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர முற்றிலுமாக தடை விதிக்கப்படுவதாகவும் நகரத் துணை மேயர் கு ஜுன்யன் அறிவித்துள்ளார். குறிப்பாக சில பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிய எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் தான் இந்த பைஸ். இங்குக் கடந்த வாரம் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் தான் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

எல்லைகள்
கொரோனா தொடங்கியது முதலே வியட்நாம் மற்றும் மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கும் பணிகளில் சீனா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இதற்காக அதன் தெற்கு எல்லையில் வேலிகளும் அமைக்கப்பட்டன. மேலும் எல்லை அருகே வசிக்கும் மக்களிடம் பெரியளவில் கொரோனா பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஜூரோ கொரோனா இலக்கை அடைந்த பாடு இல்லை.
Recommended Video

சீனா படும்பாடு
சீனாவின் இந்த ஜூரோ கோவிட் கொள்கையால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதுவும் இப்போது டெல்டா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் சூழலில், மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைச் சீனா அமல்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக வெளியே வர முடியாமல் சிலர் இறக்கும் சூழல் கூட ஏற்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications