'பேரப்பசங்களா'.. விந்தணு தானம் செய்ய வாங்க.. வயசு பசங்களுக்கு சீனாவில் சலுகை மழை.. பரபர பின்னணி
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என சீனாவில் உள்ள விந்தணு சேமிப்பு வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பெய்ஜிங்: கடந்த 61 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என சீனாவில் உள்ள விந்தணு சேமிப்பு வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடான சீனாவில், பிப்ரவரி 13ம் தேதி நிலவரப்படி 1,453,826,024 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 145 கோடி மக்கள் சீனாவில் உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியா உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 141 கோடியாக உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மக்கள் தொகையில் சீனாவை விரைவில் இந்தியா முந்திவிடும் என்று சொல்கிறார்கள்.
நீண்ட காலமாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்ட சீனா அதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறது. அந்த நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. வயதானவர்கள் அதிகமாக உள்ளார்கள்.

சலுகை அறிவிப்பு
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனா கொண்டு வந்த சட்டம் அந்நாட்டிற்கு எதிர்மறையாக அமைந்தது. பெரும்பாலானோர் குழந்தை பெற்றுக்கொள்வதையே விரும்பவில்லை. மக்களின் பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்தது. இதையடுத்து சட்டத்தை விலக்கி கொண்ட சீனா, எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வோருக்கு பெரிய அளவில் சலுகைகளையும் அறிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் தான் ஆர்வம் காட்டுவது இல்லை.

பிறப்பு எண்ணிக்கை
இந்த சூழலில் சீனாவில் உள்ள விந்தணு சேமிப்பு வங்கி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) படி, சீனாவின் மக்கள் தொகை 61 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2022 இல் பிறப்பு எண்ணிக்கை 850,000 குறைந்துள்ளது. நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். கருவுறுதலை மேம்படுத்துவதற்கான கொள்கைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருவுறாமை விகிதம்
இதற்கு மத்தியில், பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஒரு இலாப நோக்கற்ற விந்தணு வங்கி, சீன சமூக ஊடக தளமான வெய்போவில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் "பெய்ஜிங் மற்றும் டியான்ஜினில் திருமணமான தம்பதிகளின் கருவுறாமை விகிதம் 15 சதவிகிதம் அதிகமாக உள்ளது, மேலும் அவர்களில் 40 சதவிகிதம் விந்தணு பிரச்சனைகளால் ஏற்படுகிறது" என்றும் விந்தணு வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விந்தணு நன்கொடை
விந்தணு நன்கொடை தேவைப்படும் தம்பதிகள் இரண்டு வருடங்கள் வரை காத்திருப்பதை எதிர்கொண்டுள்ளதாகவும், விந்தணு தானம் செய்பவர்களுக்கு சுமார் 5,000 யுவான் ($732) வரை தருவதாகவும் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவித்திருக்கிறது விந்தணு வங்கி. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. சீனாவின்
ஷான்சி மாகாணத்தில் உள்ள மற்றொரு விந்தணு வங்கியும் நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு சலுகையில், நன்கொடையாளர்கள் விந்து பகுப்பாய்வு, குரோமோசோம் சோதனை மற்றும் மரபணு மற்றும் தொற்று நோய்களுக்கான ஸ்கிரீனிங் உள்ளிட்ட இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்யலாம் என்று கூறியுள்ளது.

இலவசம்
ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு விந்தணு வங்கி, தானம் செய்பவரின் விந்தணுக்களின் மாதிரிகளை 10 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம் என்றும், தேவைப்படும் போது அந்த மாதிரிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது. இருப்பினும், வெவ்வேறு விந்தணு வங்கிகள் நன்கொடையாளர்களுக்கு வெவ்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

உயரம் எவ்வளவு
குளோபல் டைம்ஸ் படி, யுனானின் விந்தணு வங்கி 20 முதல் 40 வயதுக்குட்பட்ட நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, விந்தணு நன்கொடை அளிப்பவர் 165 செ.மீ.க்கு மேல் உயரம் இருக்க வேண்டும், நோய்த்தொற்றுகள் அல்லது மரபணு நோய்கள் எதுவும் இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . ஷான்சியில் உள்ள ஒரு விந்தணு வங்கி, நன்கொடையாளர்கள் குறைந்தபட்சம் 168 செமீ இருக்க வேண்டும் என்றும், முழுமையான நன்கொடைக்கான மானியம் 5,000 யுவான்களாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

வழுக்கைகள் வேண்டாம்
ஷாங்காயில் உள்ள மற்றொரு விந்தணு வங்கி 7,000 யுவான் ($1,000) மானியமாக வழங்கியதாக கூறப்படுகிறது. பெய்ஜிங்கில், விந்தணு வங்கிக்கு கடுமையான தேவைகள் ஏற்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் விந்தணு தானம் அளிக்க தகுதி இல்லை என்பதையும் விந்தணு வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி வழுக்கை உள்ளவர்கள், புகைபிடித்தவர்கள் அல்லது மது அருந்தியவர்கள் மற்றும் கடுமையான கிட்டப்பார்வை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விந்தணு தானம் அளித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என விந்தணு வங்கிகள் அறிவித்துள்ளன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications