சீன மொழியில் குறிப்பு.. மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம்.. திறந்து பார்த்தால்.. பகீர் சம்பவம்
பெய்ஜிங்: இன்று காலை மாமல்லபுரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம் ஒன்றின் காரணமாக அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் அந்த ட்ரம்மில் சீன மொழியில் குறிப்பு எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு கூடி உள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம்தான் சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வந்து சென்றார். அதிலும் அவர் மாமல்லபுரம்தான் வந்துவிட்டு சென்றார்.
பிரதமர் மோடியுடன் அவர் நடத்திய சந்திப்பு உலகம் முழுக்க பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த நிலையில் ஒரே வருடத்தில் இரண்டு நாட்டு உறவு மொத்தமாக முறிந்து சண்டை ஏற்பட்டுள்ளது.

பார்சல்
இந்தியா - சீனா உறவில் மாமல்லபுரம் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று காலை மாமல்லபுரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம் ஒன்றின் காரணமாக அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் அந்த ட்ரம்மில் சீன மொழியில் குறிப்பு எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு கூடி உள்ளது. கொக்கிலமேடு கடற்கரை பகுதியில்தான் அந்த ட்ரம் ஒதுங்கி உள்ளது.

மக்கள் பார்த்தனர்
இந்த ட்ரம்மை மக்கள் பார்த்ததும் என்ன இருக்கும் என்று திறந்து பார்க்கக் சென்று இருக்கிறார்கள் . ஆனால் அதன் வெளி பகுதியில் சீன மொழியில் குறிப்பு எழுதப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உடனே அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வேகமாக வந்து சோதனை செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.

உள்ளே டீ பாக்கெட்
அங்கே வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மிகவும் கவனமாக அந்த ட்ரம்மை திறந்து பார்த்தார்கள். உள்ளே கட்டு கட்டாக டீ பாக்கெட்டுகள் இருந்துள்ளது. ரீபைன்ட் சைனீஸ் டீ என்று சீன மொழியில் அந்த ட்ரம்மில் இருக்கும் பொட்டலங்களில் எழுதப்பட்டு இருந்தது. இது வெறும் டீ பாக்கெட் இல்லை என்ற சந்தேகம் உடனே போலீசுக்கு வந்தது.

சோதனை செய்தனர்
இதனால் உடனே அந்த பாக்கெட்டுகளை எடுத்து சென்று சோதனை செய்தனர். சென்னை அறிவியல் ஆய்வு கூடத்தில் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதன்படி அந்த ட்ரம்மில் இருந்தது முழுக்கு முழுக்க ஹெராயின் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் மிகவும் தூய்மையான, அதிக விலை கொண்ட ஹெராயின் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video

எத்தனை பொட்டலங்கள்
இதன் மதிப்பு மொத்தம் 250 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். மொத்தம் 78 பொட்டலங்கள் இதில் இருந்துள்ளது. சீனா அல்லது மியான்மரில் இருந்து இந்த ட்ரம் வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கடலில் ஹெராயின் கடத்தும் இந்த ட்ரம் தவறி விழுந்து தமிழகம் வந்து இருக்கலாம் அல்லது தமிழகத்தில் போதை கடத்தல் கும்பலுக்கு கூட அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications