ஹை அலர்ட்.. லடாக்கில் சீனா உருவாக்கிய புதிய "ஹாட்ஸ்பாட்".. மொத்தமாக படைகளை களமிறக்கிய இந்தியா!
லடாக்: லடாக் எல்லையில் டெப்சாங் பகுதியில் தற்போது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ள நிலையில், இந்தியா அங்கு தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு புதிய ஹாட்ஸ்பாட் பகுதி உருவாகி உள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் இதுநாள் வரை மொத்தம் மூன்று ஹாட்ஸ்பாட் பகுதியில் நிலவி வந்தது. அதன்படி சீனாவின் கவனம் முழுக்க கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்தது. அங்குதான் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
ஆனால் தற்போது லடாக்கில் மேல் உச்சியில் இருக்கும் டெப்சாங் பகுதியில் சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சீனா கவனம் செலுத்தும் பகுதிகளில் இது மிக முக்கியமான பகுதியாகும்.

மிக முக்கியம்
இந்தியா - சீனா எல்லையில் அக்சை சின் பகுதியில் இந்த டெப்சாங் இருக்கிறது. இந்த டெப்சாங் என்பது இந்தியாவின் DBO விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ளது. இங்குதான் இந்தியாவின் விமானப்படை தளமான Daulat Beg Oldie இருக்கிறது. இதைதான் DBO என்று அழைப்பார்கள். உலகில் மிக உயரமான மலை பகுதியில் இருக்கும் விமானப்படை தளம் இதுதான். இதைதான் சீனா குறி வைத்து உள்ளது.

சீனா தடுக்கிறது
இந்தியா சார்பாக இந்த விமான படைத்தளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் சாலையை தடுக்கும் வகையில் சீனா அங்கு படைகளை குவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த விமான படைத்தளத்தில் இருந்து 23 கிமீ தூரத்தில் சீனா படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் டெப்சாங் மலையில் இருந்து வெறும் 21 கிமீ தூரத்தில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.

எத்தனை வீரர்கள்
இந்த இடத்தில் மட்டும் மொத்தம் சீனாவின் வீரர்கள் 10 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு வலிமையான ஆயுதங்கள், நவீன போர் கருவிகளை சீனா களமிறக்கி உள்ளது. முக்கியமாக டேங்குகளை சீனா களமிறக்கி உள்ளது. இது போருக்கான அறிகுறி ஆகும். வேண்டும் என்றே புதிய ஹாட்ஸ்பாட் ஒன்றை சீனா இந்திய எல்லையில் உருவாக்கி உள்ளது.

இந்தியா கவனம்
இதில் இந்தியாவிற்கு என்ன சிக்கல் என்றால், இதனால் எல்லையில் இந்தியா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதாவது எல்லையில் இந்தியா எல்ஏசி அருகே நடத்தும் ரோந்து பணிகளை தடுக்கும் வகையில் சீனா சரியாக தனது படைகளை குவித்து உள்ளது. சரியாக அந்த இடத்தை குறி வைத்து சீனா களமிறங்கி உள்ளது. இந்தியாவின் இந்த போக்கு கண்டிப்பாக திட்டமிட்டு நடக்கிறது என்கிறார்கள்.

இந்தியாவும் படைகள் குவிப்பு
இதை தொடர்ந்து தற்போது இந்தியாவும் அங்கே படைகளை குவித்து வருகிறது. முக்கியமாக டெப்சாங் பகுதியில் இந்தியா மூன்று டிவிஷன் படைகளை களமிறக்கி உள்ளது. ஒரு டிவிசனுக்கு 12 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள். இதன் மூலம் அங்கு மட்டும் 36000 வீரர்களை இந்தியா களமிறக்கி உள்ளது. சீனா இதை எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அங்கு சீனா நவீன ஆயுதங்களையும் களமிறக்கி உள்ளது.

விமானப்படை
அதேபோல் அங்கு இந்தியாவின் விமானப்படையும் தீவிரமான ரோந்து பணிகளை செய்து வருகிறது. இதற்காக சுகோய் மற்றும் மிக் ரக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானப்படை ஹை அலர்ட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இந்திய விமானப்படை தொடர்ந்து சோதனைகளையும், ரோந்துகளையும் செய்து வருகிறது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர்












Click it and Unblock the Notifications