அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா! ரஃபேல் எல்லாம் ஓரம் போ.. நெருப்பை கக்கும் டிராகன்!
பெய்ஜிங்: தொழில்நுட்ப விஷயங்களில் அமெரிக்காவுக்கு சீனா நேரடி போட்டியாக உருவெடுத்திருக்கிறது. தற்போது தொழில்நுட்ப விவகாரங்களையும் தாண்டி ராணுவ உபகரணங்கள் உற்பத்தியிலும் சீனா மாஸ் காட்டி வருகிறது. அதாவது போர் விமானங்களை மலிவான விலையில், உயர் தொழில்நுட்பத்துடன் அமெரிக்க விமானங்களையும் மிஞ்சும் அளவுக்கு தரமான விமானத்தை சீனா களமிறக்கியுள்ளது.
சமீபத்தில் பென்டகன் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில், போர் விமான உற்பத்தியில் சீனா எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது விவரிக்கப்பட்டிருந்தது. மூன்று விஷயங்களில் சீனா இதனை சாத்தியமாக்கியிருப்பதாக பென்டகன் கூறியிருக்கிறது.

1. குறைந்த விலை
2. அரசியல் நிபந்தனைகள்
3. நிதி உதவி
4.5ம் தலைமுறை விமானத்தின் பலம்
5ம் தலைமுறை விமானத்தை நோக்கி உலகம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த விமானங்கள் ரொம்பவும் காஸ்ட்லி. எனவே 4.5ம் தலைமுறை விமானங்களை குறைந்த விலையில் வாங்கி, விமானப்படை பலத்தை உலக நாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 4.5ம் தலைமுறை விமான சப்ளையில் சீனா முன்னணியில் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் விலை குறைவு என்பதுதான்.
விலை என்ன?
சீனாவின் J-10C விமானம் ரூ.360-450 கோடி வரை விற்கப்படுகிறது
அமெரிக்காவின் F-16V விமானம் ரூ.630-720 கோடி வரை விற்கப்படுகிறது
பிரான்சின் ரபேல் விமானம் ரூ.810-990 கோடி வரை விற்கப்படுகிறது
ஐரோப்பாவின் தைபூன் விமானம் ரூ.900-1080 கோடி வரை விற்கப்படுகிறது
விலை குறைவு ஏன்?
இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணம் சீனாவில் உழைப்பு சக்தி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால்தான். அதேபோல உதிரி பாகங்களின் விலையும் குறைவு. மேலும் இந்த விமானத்தின் முக்கிய பாகங்கள் அரசு நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. மற்றொரு காரணம் சீன அரசு வழங்கும் மானியம்தான்.
புதிய கண்டுபிடிப்புகள்
பாதுகாப்பு பொருட்களை பொறுத்தவரை லாபம் பார்ப்பதை விட, தனது பொருட்கள் சர்வதேச மார்க்கெட்டில் நிலைத்து இருக்க வேண்டும் என்றுதான் சீனா விரும்புகிறது. இதைவிட முக்கியமான விஷயம், சீனா தனது ஆராய்ச்சிக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது. எனவே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. இதெல்லாம் விமானத்தின் விலையை குறைத்துள்ளன.
சீனாவின் வளர்ச்சி
சீனா விமானங்கள் சர்வதேச அளவில், அமெரிக்காவுக்கு போட்டியாக உருவாக மற்றொரு காரணம், அரசியல் நிபந்தனைகள் இல்லாததுதான். அமெரிக்கா ஒரு நாட்டுக்கு தன்னுடைய பொருட்களை விற்கிறது எனில், அந்நாட்டின் அரசியலை கூர்ந்து கவனிக்கும். உதாரணத்திற்கு சோசலிச கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு தனது ராணுவ ஆயுதங்களை விற்காது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் நாடுகளுக்கும் தனது ஆயுதங்களை விற்காது. ஆனால், சீனாவுக்கு இப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது. எனவே சீனாவிடம் ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.
போர் விமானம் விற்பனை
குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய, அதே நேரம் மேற்கத்திய நாடுகளிடம் உறவுகள் சுமுகமாக இல்லாத நாடுகளுக்கு சீனாவின் தயாரிப்புகள் வரப்பிரசாதமாகும். பாகிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் ரஃபேல் விமானங்களை வாங்குவதால், சீனாவிடமிருந்து பாகிஸ்தான் J-10C விமானத்தை வாங்குகிறது. அதேபோல எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கு நாடுகள் போர் விமானங்களை விற்காது. எனவே சீனாவின் விமானத்தை இந்நாடுகள் வாங்க திட்டமிட்டு வருகின்றன.
அதிகரித்த விற்பனை
இது தவிர சர்வதேச அளவில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. எனவே ஏற்கனவே பெறப்பட்ட ஆடர்களை சரியான நேரத்திற்கு விநியோகம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இந்த சான்ஸை சீனா பயன்படுத்திக்கொண்டு தனது விற்பனையை அதிகரித்திருக்கிறது.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications