இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதுனு தெரியல..வேலைக்கே போகாமல் ஏமாற்றும் இளசுகள்! அதென்ன வாடகை ஆபிஸ்!
பெய்ஜிங்: சீனாவை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புறக்கணித்து வரும் நிலையில் அங்கு வேலை இழப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நண்பர்கள் உறவினர்களிடம் வேலை இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக போலி அலுவலகங்களில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் இளைஞர்கள். இதற்காக அவர்கள் தினமும் வாடகையும் செலுத்துகிறார்களாம்.
மற்ற உலக நாடுகளைப் போலவே சீனாவிலும் கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு அந்த நாட்டின் பொருளாதாரமானது அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு விவகாரங்கள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் சீனாவை புறக்கணித்து வருகின்றன.

மேலும் சீனாவில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செல்போன், கார் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாறி வருகின்றன.
மேலும், சீனாவின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் கடும் இழப்பை சந்தித்து இருக்கிறது. இதனால் நாட்டில் எப்போதும் இல்லாத அளவு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. சுமார் 22 சதவீத இளைஞர்கள் வேலை இல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார்கள். மேலும் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீத இளைஞர்கள் மிகக் குறைவான ஊதியத்தில் கூட வேலை செய்ய தயாராகி வருகின்றனர். பொருளாதார மந்த நிலை தான் இந்த சூழலுக்கு காரணம்.
இந்த நிலையில் பெரும்பாலான சீனர்கள் தங்கள் வேலை இழந்ததை மறைத்து பணியில் இருப்பதாக பொய்யாக கூறி வருகிறார்களாம். செமி கண்டக்டர் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த சென் என்பவர் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தான் வேலையை இழந்தால் காதலி மற்றும் பெற்றோர்கள் தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதால் சில நிறுவனங்கள் போலி நிறுவனத்தில் இணைந்துள்ளார். சிலர் சீனாவின் பல்வேறு பகுதிகளில் போலி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதில் தினமும் 290 கட்டணம் செலுத்தினால் அங்கு செல்லலாம்.
அங்கு கார்ப்பரேட் அலுவலகம் போலவே கம்ப்யூட்டர் மேஜை உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். மேலும் மதிய உணவு தருவார்கள். காலை 10 மணி முதல் மாலை வரை அந்த அலுவலகத்தில் பணியாற்றியது போல நடிக்கலாம். மேலும் தனது குடும்பத்தில் யாராவது சந்திக்க வருவார்கள் என்றால் அவர்களுக்கும் அனுமதி உண்டு. மற்ற நாட்களில் ஹோட்டலில் சர்வராக பணியாற்றுகிறேன்” என்கிறார்.
சீனாவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதோடு புதிய வேலை கிடைக்காமல் பரிதவிப்பதால் சமூக அந்தஸ்து உள்ளிட்டவை கருதி இவ்வாறு போலி அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால் சீனாவில் போலி அலுவலகங்கள் அதிக அளவில் முளைத்து உள்ளன. சாதாரண ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 290 வரையிலும் மேனேஜர் வரை பதவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் செலுத்துகின்றனர். மேலும் இளைஞர்கள் கட்டணம் செலுத்தி அந்த டூப்ளிகேட் அலுவலகங்களுக்கு சென்று போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சீனா உரிய கவனம் எடுத்தால் மட்டுமே பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்சனைகள் சரியாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications