அணு ஆயுதங்களை காட்சிப்படுத்திய சீனா.. அவ்வளவு சீன் எல்லாம் இல்லீங்க! உடைத்து பேசிய நிபுணர்கள்
பெய்ஜிங்: இரண்டாம் உலகப்போர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ அணிவகுப்பை சீனா நடத்தியிருந்தது. இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் பயங்கரமானவை என்று பேச்சுகள் ஒரு பக்கம் எழுந்திருந்த நிலையில், மறுபுறம் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதிவேக ஏவுகணைகள், அடுத்த தலைமுறை டாங்கிகள், ஸ்டெல்த் UCAVகள், உயர்-சக்தி லேசர்கள், சைபர் தாக்குதலால் பாதிக்கப்படாத செயற்கைக்கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகள் என பல ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இத்துடன் ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தனது புதிய டைப்-100 டாங்கையும் சீனா அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்தியாவை பொறுத்தவரை இது வெறும் கண்காட்சி மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. இது குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் சுயாஷ் தேசாய் கூறுகையில், சீனாவின் பல போர் கருவிகள் இந்தியாவின் திட்டத்தை போல இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சீனா காட்சிப்படுத்தியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதற்காவே அவை அனைத்தும் பயன்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
சீனா 141 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.4 கோடி பேர் ராணுவத்தில் சேரும் வயதை எட்டுகிறார்கள். இந்தியாவில் இது 1.9 கோடியாக இருக்கிறது. மற்ற ஒப்பீடுகள் கீழ்வருமாறு
சீனா
- ராணுவ வீரர்கள் - 20 லட்சம்
- ரிசர்வ் படை - 5.10 லட்சம்
- துணை ராணுவம் - 6.25 லட்சம்
- ராணுவ செலவு - ₹22,296 கோடி
- மொத்த ராணுவ விமானங்கள் - 3,309
- போர் விமானங்கள் - 1,212
- விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் - 3
- நீர்மூழ்கி கப்பல்கள் - 61
- மொத்த ராணுவ கப்பல்கள் - 754
இந்தியா
- ராணுவ வீரர்கள் - 14 லட்சம்
- ரிசர்வ் படை - 11 லட்சம்
- துணை ராணுவம் - 25 லட்சம்
- ராணுவ செலவு - ₹6,262.5 கோடி
- மொத்த ராணுவ விமானங்கள் - 2,229
- போர் விமானங்கள் - 513
- விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் - 2
- நீர்மூழ்கி கப்பல்கள் - 18
- மொத்த ராணுவ கப்பல்கள் - 293
ஆதாரம்: குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ்.
இதுதான் இரு நாடுகளின் பலம். எனவே சீனாவின் ராணுவ அணிவகுப்பை பார்த்து இந்தியா பயப்படாது. ஆனால் ராணுவ அணிவகுப்புகளுக்கு அப்பால் இது வேறு ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதாவது பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உள்நாட்டு தேசியவாதத்தை வலுப்படுத்தும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தவே இந்த பேரணி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications