இணைய மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்.. கம்போடியாவில் கையும் களவுமாக கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃப்னோம்பென்: கம்போடியாவில் இணையதள மோசடியில் ஈடுபட்ட 70 சீனர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். சீன அரசின் கோரிக்கையை தொடர்ந்து அவர்கள் அந்நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

அண்டை நாடான எல்லையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதோடு, ரணுவத்தையும் குவித்து போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எச்சரித்துள்ள சீனா, இந்தியாவில் உள்ள அந்நாட்டினரை திரும்ப அழைக்க திட்டமிட்டுள்ளது.

Chinese citizens arrested in Cambodia over an alleged internet scam

இந்நிலையில் கம்போடியா நாட்டுக்கு பிழைப்புக்காக சென்ற சீனர்கள் அங்கு இணையதள மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இணையதளம் மூலம் அப்பாவி மக்களிடம் மோசடி செய்த பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோ சீனர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் பிடிபட்ட சீன மோசடி மன்னர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் அந்நாட்டு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவர்களின் கைகளை கட்டி அந்நாட்டு போலீசார் விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.

மோசடியில் ஈடுபட்ட சீனர்கள் கம்போடியாவின் ஃப்னோம்பென் விமான நிலையத்தில் கைகள் கட்டப்பட்டு கூனி குறுகி அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chinese citizens who have been arrested over an alleged internet scam, wait with their hands tied up before being deported at Phnom Penh International Airport in Phnom Penh, Cambodia
Please Wait while comments are loading...