'நீ இன்னைக்கு செத்தடா'.. கல்யாண மாப்பிள்ளைக்கு மறக்க முடியாத பரிசு.. 7 முன்னாள் காதலிகள் கொடுத்த ஷாக்
சீனாவில் திருமணத்தின் போது முன்னாள் காதலிகள் மொத்தமாக வந்து மாப்பிள்ளைக்கு எதிராக பேனர் வைத்து போராட்டம் நடத்தினர்.
பெய்ஜிங்: கல்யாண மண்டபத்திற்குள் மாப்பிள்ளை குஷியாக தாலி கட்டுவதற்கு காத்துக்கொண்டிருந்தபோது, மண்டபத்திற்கு வெளியே முன்னாள் காதலிகள் 7 பேர் குவிந்து போராட்டம் நடத்தியது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதென்னப்பா புதுசா இருக்கே என்கிறீர்களா, ஆமாங்க.. புதுசுதான்..காதலனுக்கு கல்யாணம் ஆகப்போகுதுனு கேள்விப்பட்ட உடனே முன்னாள் காதலிகள் மொத்தமாக கல்யாண மண்டபத்தின் வாயிலுக்கு வந்து , எங்க வயித்தெறுச்சல கொட்டிக்கிட்டு நீ நல்லா வாழந்திருவியா என்று சாபம் விடாத குறையாக கத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். கல்யாணம் மண்டபம் கடைசியில போர்களம் மாதிரி ஆகிடுச்சு. உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நம்மூரில் சிலர் காதலிப்பது ஒருவரை, கல்யாணம் செய்வது வேறு ஒருவரை என்று இருப்பார்கள். பல பெண்களை காதலித்து ஏமாற்றிவிட்டு கல்யாணமோ வேறு பெண்ணை செய்திருப்பார்கள். சிலர் நிறைய பெண்களை காதலித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கல்யாணம் செய்திருப்பார்கள். ஏனெனில் ஊரக்கூட்டி கல்யாணம் செய்தால் முன்னாள் காதலிகள் யாரேனும் வந்து பிரச்சனை செய்வார்களோ என்று பயந்திருப்பார்கள். இதுபோன்ற ரோமியோக்களுக்கு காதல் இனிப்பாக இருந்தாலும் கல்யாணம் மிகவும் கசப்பாகவே முடிந்திருக்கும்.

பெண்கள்
சரி விஷயத்திற்கு வருவோம்.. தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென் (குடும்ப பெயர்). இவருக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் நடந்தது.. மணடபத்தில் திருமண ஏற்பாடுகள் கோலாகமாக நடந்து கொண்டு இருந்த போது திடீரென சில இளம் பெண்கள் மண்டபத்திற்கு முன்பு திரண்டு வந்தனர். அவர்கள் கையில் பேனர் ஒன்றை வைத்துக் கொண்டு கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர். கடந்த காலங்களில் சென்னுடன் இருந்த ரகசிய வாழ்க்கையை அம்பலப்படுத்துவோம் என்று மிரட்டினர்.

மாப்பிள்ளை குட்டு
அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலிகள் என்பதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பேனரை பிடித்துகொண்டு நின்ற பெண்களின் செயலை பார்த்த பின்னர் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் என்ன நடந்தது என்று விசாரித்து இருக்கிறார்கள்.அப்போது தான் மாப்பிள்ளையின் குட்டு வெளியே வந்திருக்கிறது. மாப்பிள்ளை இத்தனை பேரையா ஏமாற்றினார் என்று அங்கிருந்தவர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

மன்னிப்பு கேட்டார்
அப்போது அந்த பெண்கள் கூறுகையில், "பெண்களை ஏமாத்தாதீங்க. நீங்க நேர்மையாக இருங்க. எதிர்காலத்துல அவங்க உங்கள பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலைமை என்னாகும் என கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் முன்னாள் காதலன் சென்னுடன் காதலிகள் தகராறு செய்தனர். அத்துடன் சென்னின் வருங்கால மனைவியிடமும் தகராறு செய்திருக்கிறார்கள். இதையடுத்து மணப்பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையிடம் என்னைய்யா இது என்று விளக்கம் கேட்டதுடன் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள். சென்னும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

வாய் திறக்கவில்லை
இதுபற்றி சென் கூறும் போது, "இது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. இப்போது என் புது மனைவி என்னுடன் சண்டையிட்டுள்ளார், என்னிடம் முன்னாள் காதலிகள் இப்படி நடந்து கொண்டதற்காக நான் கோபப்படவில்லை. கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்திருக்கிறேன் ஒப்புக் கொள்கிறேன். இளம் வயசுல, வயசுக்கோளாறுல இப்படி பக்குவம் இல்லாம நடந்துகிட்டேன். நான் பல பெண்கள் மனசை காயப்படுத்திட்டேன். என்னை மாதிரி யாரும் செய்யாமல் உங்கள் காதலிக்கு உண்மையாக இருங்க" என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் இத்தனை காதலிகளை ஏன் ஏமாத்தினார் என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை. சீனாவில் திருமணம் நடக்க போகும் போது முன்னாள் காதலிகள் மொத்தமாக போய் போராட்டம் செஞ்ச சம்பவம் பெரிய அளவில் இணையதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications