மூடநம்பிக்கையால் விமானத்தை தாமதப்படுத்திய சீனப் பயணி

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

ஷாங்காய் விமான நிலையத்தில் , மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது காசுகளை வீசியதை அடுத்து, அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த சீன விமான நிறுவனம் கூறியது.

ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம்
Getty Images
ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம்

சைனீஸ் சதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தை சென்றடையும் வழியில், அந்த 80 வயதான அந்த பெண்மணி தன்னிடம் இருந்த நாணயங்களை விமானம் மீது வீசினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், தனது "பாதுகாப்புக்காக பிரார்த்தனை" செய்வதற்காக அவர் நாணயங்களை வீசியதாக காவல்துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

ஒன்பது நாணயங்களை வீசியதில், ஒரே ஒரு நாணயம் அவர் இலக்கு வைத்தபடி இயந்திரத்தின் மீது பட்டது.

ஆனால் பல மணிநேரங்களுக்கு 150 பயணிகளை வெளியேற்றுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

இந்த பெண்மணி பாதுகாப்பான விமானப் பயணத்துக்காக நாணயங்களை வீசும் விநோதமான நடத்தையை கவனித்த ஒரு பயணி, உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததை அடுத்து, ஷாங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்

தனது கணவர், மகள் மற்றும் மருமகளுடன் பயணம் செய்த அந்தப் பெண்மணி விசாரணைக்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சைனா சதர்ன் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவு, விமானத்தின் இயந்திரத்தை முழுமையான பரிசோதித்துள்ளது," என சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வளைதலமான வெய்போவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் (Weibo)தெரிவித்துள்ளது.

கியு என்ற பெயர் கொண்ட, இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டபிறகு, அவர் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக கூறினார்.

தங்களது கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொண்ட காவல்துறையினர், இது 1.7 யுவானுடைய மதிப்பைக் கொண்ட ஒரு நாணயத்திற்கு ஒப்பானது என்று கூறினர்.

கியுவின் நண்பர் ஒருவர், கியு புத்த மதத்தில் நம்பிக்கை உள்ளவர் என்று கூறினார்,'' என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விமானம் இறுதியாக சோதனைகளுக்குப் பிறகு எல்லாம் நல்லமுறையில் இருப்பதாக சான்று அளிக்கப்பட்டு, 5 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.

சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் நிர்வாகம், பின்னர் பயணிகளை, உள்நாட்டு விமானச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும், விமானங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய நடத்தைகளைத் தவிர்க்கவும் என்றும் கூறியது.

பிற செய்திகள்:

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

தாயுமானவர்களா தந்தையர் ?

இலங்கை : நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

BBC Tamil
English summary
A superstitious elderly passenger delayed a flight in Shanghai after throwing coins at the engine for good luck, a Chinese airline has confirmed.
Please Wait while comments are loading...