என்ன படம்.. என்ன பாடல்.. எந்த ஹீரோ.. 75வது கோல்டன் கோல்ப் விருதுகள் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கலை உலகில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பார்க்கப்படும் விருதுகளில் கோல்டன் கோல்ப் விருதும் ஒன்று. ஏ.ஆர். ரகுமான் கோல்டன் கோல்ப் விருது வாங்கிய போதே அவர் கண்டிப்பாக ஆஸ்கர் விருது வாங்குவார் என்று கணித்தார்கள்.

அந்த அளவுக்கு இரண்டும் கிட்டத்தட்ட ஒரே முறையில் வழங்கப்படும். இரண்டுக்குமான மதிப்பும் ஒரே அளவுதான் இருக்கிறது.

இந்த நிலையில் 75வது கோல்டன் கோல்ப் விருதுகள் அமெரிக்காவில் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. என்ன படம், பாடல் என எல்லா விருதுகளுக்குமான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

படம் எது

படம் எது

டிராமா பிரிவில் சிறந்த படத்திற்கான விருது 'திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங்' என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த படத்திற்கான விருது 'லேடி பேர்ட்' என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. 'தி ஷேப் ஆப் வாட்டர்' படத்தை எடுத்த 'குயில்லர்மோ டெல் டோரோ' சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார்.

நடிப்பு

நடிப்பு

டிராமா பிரிவில் சிறந்த நடிகைக்கான விருது 'பிரான்சிஸ் மேக் டோர்மண்ட்' என்பவருக்கு 'திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங்' நாடகத்திற்காக வழங்கப்பட்டது. டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது கேரி ஓல்ட்மேன் என்பவருக்கு 'டார்கஸ்ட் ஹவர்' படத்திற்காக வழங்கப்பட்டது. படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது 'சோரிஸ் ரோனான்' என்பவருக்கு 'லேடி பேர்ட்' படத்திற்காக வழங்கப்பட்டது. படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது 'ஜேம்ஸ் பிரான்கோ' என்பவருக்கு 'தி டிசாஸ்டர் ஆர்ட்டிஸ்ட்' படத்திற்காக வழங்கப்பட்டது.

மற்ற பிரிவுகள்

மற்ற பிரிவுகள்

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது 'கோகோ' படத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது 'இன் தி ஃபேட்' படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் 'அலெக்சான்ட்ரா டெஸ்பேல்ட்க்கு' 'தி சேப் ஆப் வாட்டர்' படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த பாடலாக 'திஸ் இஸ் மீ' என்ற பாடல் ' தி கிரெட்டெஸ்ட் ஷோமேன்' படத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.

முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

கடந்த வருடம் முழுக்க #MeToo என்ற ஹேஸ்டேக்கில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பேசப்பட்டது. தற்போது இந்த விருது வழங்கும் விழாவிலும் இதுகுறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் 'செத் மேயர்' பேசினார். பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் இது போன்ற சமூகம் சார்ந்த விஷயங்களை பேசுவது அதிகமாக நடக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
75th Golden Globe has been announced in America. Best motion picture goes to “Lady Bird”. Best director, motion picture goes to Guillermo del Toro, “The Shape of Water”. Best performance by an actress in a motion picture in drama goes to Frances McDormand, “Three Billboards Outside Ebbing, Missouri”. Best performance by an actor in a motion picture in drama goes to Gary Oldman, “Darkest Hour”

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற