ஆஸ்திரேலியாவில் 9 பேரால் தாக்கப்பட்ட இந்திய மாணவரின் நிலைமை கவலைக்கிடம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மாணவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் படித்து வருபவர் மன்ராஜ்விந்தர் சிங்(20). அவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது 2 நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கையில் ஆப்பிரிக்கர்கள் போன்று இருந்த 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் அவர்கள் அருகில் வந்துள்ளனர்.
அந்த கும்பல் சிங் மற்றும் அவரது நண்பர்களை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிங் ஆல்பிரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது சகோதரர் யாத்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 17, 16 மற்றும் 15 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்தனர். அதில் 15 வயது சிறுவன் மட்டும் விடுவிக்கப்பட்டான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications