For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன தடுப்பூசி போட்ட நாடுகளின் நிலைமையை பார்த்தீங்களா.. கலங்கடிக்கும் டேட்டா! அப்பாடா நாம தப்பிச்சோம்

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் தயாரித்த தடுப்பூசிகளை அதிக அளவுக்கு பயன்படுத்திய நாடுகளில் தற்போது கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளது.

மங்கோலியா, சீஷெல் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் சீனாவின் தடுப்பூசியை அதிகமாக பயன்படுத்தினால் தற்போது அங்கு நோய் பரவல் அதிகமாக உள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிரடி..விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி சொத்துகள்.. அரசு வங்கிகளுக்கு மாற்றம்அமலாக்கத்துறை அதிரடி..விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி சொத்துகள்.. அரசு வங்கிகளுக்கு மாற்றம்

டாப் 10 நாடுகள்

டாப் 10 நாடுகள்

சீஷெல், சிலி, பக்ரைன் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் 50 முதல் 68 சதவீதம் வரையிலான தங்கள் மக்களுக்கு சீன நாட்டு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியுள்ளன. ஆனால் இந்த நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் நோய் பரவல் அதிகரித்துள்ளது. நோய் பரவல் புதிதாக அதிகரித்த டாப் 10 நாடுகளில் இவையும் அடங்கியுள்ளன.

சீசெல்ஸ் நாட்டில் கொரோனா அலை

சீசெல்ஸ் நாட்டில் கொரோனா அலை

உலகிலேயே அதிகமான சதவீதம் அளவுக்கு தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடு சீசெல்ஸ் ஆகும். ஆனால் அங்கு மீண்டும் கொரோனா அலை பரவுவதற்கு காரணம் சீன நாட்டு தடுப்பூசிகளின் செயலின்மை தான் என்று கூறப்படுகிறது. சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் டாப்

இஸ்ரேல் டாப்

அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்ட நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ளது இஸ்ரேல். இங்கு அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவல் குறைந்து விட்டது. அங்கு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 4.95 புதிய நோயாளிகள் பதிவாகிறார்கள். சீசெல்ஸ் நாட்டில் ஒரு மில்லியனுக்கு 716 நோய் பதிவாகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சீனா மற்றும் சுமார் 90 நாடுகள் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை, சீன நாட்டு தடுப்பூசியை நம்ப முடியாது என ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றன. இந்தியாவும் சீனத் தடுப்பூசியை பயன்படுத்தவில்லை. நமது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட, சீன தடுப்பூசி பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. ஆனால் சீன தடுப்பூசியை பயன்படுத்திய பல நாடுகளும் இவ்வாறு சிக்கலில் மாட்டியுள்ளன.

English summary
Corona cases has been increasing where China's vaccine used, says The New York Times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X