கொரோனா முன்னெச்சரிக்கை- சிக்கிமில் பிற மாநிலத்தவர் நுழைய தடை- இன்னர் லைன் பெர்மிட் ரத்து
கேங்டாங்: கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலத்தவர் உள்ளே நுழைவதற்கான இன்னர்லைன் பெர்மிட் வழங்கும் முறையை 30 நாட்களுக்கு ரத்து செய்வதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டுவித்து வருகிறது. சீனாவில் 3,000 பேரை பலி கொண்டிருக்கும் கொரோனா, பிற நாடுகளையும் தாக்கி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அதிதீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிக்கிம் மாநில அரசு பிற மாநிலத்தவர் நுழைவதற்கான இன்னர் லைன் பெர்மிட்டை 30 நாட்களுக்கு ரத்து செய்திருக்கிறது.
கொரோனா தாக்குதலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிக்கிம் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து சிக்கிம் மாநிலத்தவரை மட்டுமே அம்மாநில பேருந்துகள் அழைத்துச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிக்கிம் மாநிலத்துக்கு வருகை தந்த பிற மாநில பயணிகள் 4.06 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஜப்பான், சீனா, நேபாளில் இருந்து வந்த 14 சுற்றுலா பயணிகளும் அடங்குவர். சிக்கிம் மாநிலத்துக்குள் நுழையும் இடங்களில் சோதனைச் சாவடிகளிலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சிக்கிம் அரசு கூறியுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications