1 லட்சத்தை நெருங்கியது.. மீண்டும் வேகம் எடுத்த கொரோனா.. உலகம் முழுக்க 3,356 பேர் பரிதாப பலி!

உலகில் மொத்தம் 80 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. உலகில் மொத்தம் 80 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

Recommended Video

    Corona virus : Affected toll nears 1 lakhs all over the world

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும்.

    இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதியதாக ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டததான்.

    வேகம்

    வேகம்

    கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. 99,001 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. சீனாவில்தான் அதிகம்பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் 85000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3,356 கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர் . சீனாவில் மட்டும் 3320 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர்.

    எங்கு

    எங்கு

    அமெரிக்காவை 145 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். வாஷிங்டனில் மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர். அதே போல் ஈரான் இந்த வைரஸ் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் மிக வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அங்கு 3,513 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 117 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    இத்தாலி எப்படி

    இத்தாலி எப்படி

    ஈரானுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 2855 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 147 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் தென் கொரியாவை இந்த வைரஸ் மொத்தமாக முடக்கி உள்ளது. அங்கு 6000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில், உத்தரகாண்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முதல் நாள் டெல்லியில் பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.டெல்லியில் காசியாபாத் பகுதியில் இன்னொரு நபருக்கும் வைரஸ் தாக்கியது நேற்று உறுதி செய்யப்பட்டது.

    சீனா நிலை

    சீனா நிலை

    இந்த நிலையில் சீனா இந்த பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அங்கு இதைவிட அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சீன அரசு மக்களை சமாதான படுத்த வேண்டும் என்று இப்படி பொய் சொல்கிறது என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+