For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடக்கு இத்தாலிக்குப் பரவிய.. இந்திய கொரோனாவைரஸ்.. அப்பா மகளுக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

ரோம்: இந்தியாவிலிருந்து வடக்கு இத்தாலிக்குத் திரும்பிய அப்பா, மகளுக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம்தான் மத்திய இத்தாலியில் ஒருவருக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வடக்கு இத்தாலிக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வருவோர் தற்போது தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

Coronavirus: Indian variant detected in North Italy

இதுகுறித்து வெனிட்டோ பிராந்திய தலைவர் லூகாா ஜயா கூறுகையில், இரண்டு இந்தியர்களுக்கு (அப்பா, மகள்) இந்திய வகை கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரும் பசனோ நகரைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர். வெனிஸ் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிதான் பசனோ.

இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.. நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.. நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு

சமீபத்தில்தான் அப்பா மகள் இருவரும் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தனர். இருவரையும் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்குதலின் 2வது அலை வேகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து யாரும் இத்தாலிக்கு வருவதற்கும், இத்தாலியிலிருந்து யாரும் இந்தியாவுக்குச் செல்வதற்கும் அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

English summary
Indian variant Coronavirus has been found in Northern Italy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X