தொடரும் இன்னல்: உலகம் முழுதும் கொரோனாவுக்கு இதுவரை 6,268,106 பேர் பலி.. 515,206,754 பேர் பாதிப்பு
கொரோனாதொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் தொடர்ந்து வருகிறது
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன.
இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,268,106 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 515,206,754 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 469,810,679 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,127,969 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருந்து
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 83,338,321 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68,069 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,022,339 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 80,821,959 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்தியா
இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,091,299 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 2,898 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 523,920 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை42,544,689 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தடுப்பூசி
கொரோனாவின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 7 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிப்பு
தொற்று பாதிப்பில் உலகல் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், நம் நாடும் 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 30,502,501 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 20,072 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 663,816 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 51 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 29,602,372 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications