"இரண்டே வாரம்.." சீனா செய்த சம்பவம்.. ஆளை காலி செய்த கொரோனா வைரஸ்.. வெளியான பகீர் தகவல்
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மனிதக் குலத்திற்கே பேரழிவை ஏற்படுத்திய நிலையில், இப்போது அது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்தது. அதன் பிறகு மெல்ல உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை வைத்து செய்துவிட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் இந்த கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல லட்சம் பேர் தங்கள் உயிர்களையே கூட இழந்தனர்.
கொரோனா வைரஸ்: இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வருவதே மிக பெரிய போராட்டமாகிவிட்டது. கொரோனா வேக்சின், தடுப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பின்னரே கொரோனா கட்டுக்குள் வந்தது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட இதுவரை நமக்கு கொரோனா தோற்றம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அது தொடர்பாக நீண்ட காலமாக மர்மம் நிலவியே வருகிறது.
இதற்கிடையே அந்த கொரோனா வைரஸ் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2019 டிச. மாதம் தான் கொரோனா குறித்து உலகெங்கும் தெரிய வந்தது. ஆனால், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சீன ஆய்வாளர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் இருந்ததாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள்: கடந்த 2019 டிசம்பர் 28ஆம் தேதியே சீன ஆய்வாளர்கள் கொரோனா வைரஸின் முழுமையான டிஎன்ஏ வரிசையை இணையத்தில் இருக்கும் ஒரு டேட்டா பேஸ்களில் பதிவேற்றியதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2020 ஜன.11ஆம் தேதி தான் சீன அதிகாரிகள் இது குறித்து உலக சுகாதார மையத்தில் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா பற்றி உலக நாடுகளுக்குத் தெரியும் முன்பு சீனாவிடம் முழு டிஎன்ஏ இருந்துள்ளது.
இருப்பினும், சீன அதிகாரிகள் உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) ஜனவரி 11 அன்று தரவைப் பகிர்ந்து கொண்டனர். சீனாவுக்கு முன்கூட்டியே கொரோனா குறித்துத் தெரிந்து இருக்கிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது. முன்கூட்டியே சீன ஆய்வாளர்கள் கொரோனா குறித்து எச்சரித்து இருந்தால் நாம் அதற்கேற்ப கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கலாம். இதன் மூலம் நம்மால் பல லட்சம் பேரைக் காப்பாற்றி இருக்க முடியும்.
சரியான நிலைப்பாடு: இருப்பினும், சீனா தங்கள் நிலைப்பாட்டைச் சரி என்றே தொடர்ந்து கூறி வருகிறது. கொரோனா பரவ ஆரம்பித்த நாள் முதலே அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளையே எடுத்து வருவதாகச் சீன செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். கொரோனா குறித்து முன்கூட்டியே தெரியாது என்றே சீன ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
2019இல் கொரோனா டிஎன்ஏவை பகிர்ந்தவர் சீன ஆய்வாளர் டாக்டர் லிலி ரென். இது குறித்துக் கூடுதல் விளக்கங்களை அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனம் கேட்ட போதிலும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அந்த தரவுகள் இணையத்தில் இருந்து திடீரென அகற்றப்பட்டன. அவை மீண்டும் லிலி ரென் பெயரில் வெளியாகவே இல்லை. அதேநேரம் 2020 ஜனவரி 12ஆம் தேதி வேறு ஒரு ஆய்வாளர்கள் பெயரில் அமெரிக்கத் தேசிய சுகாதார தளத்தில் கொரோனா டிஎன்ஏ பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் பதிவு செய்த டாக்டரிடம் டிஎன்ஏ இருந்தது எப்படி, அவர் எதற்காக அந்த தகவல்களை நீக்கினார் என்பது தொடங்கி பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமலேயே இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications