ஹோட்டல் மொட்டை மாடியில் "ரவுசு".. போலீஸ் வந்தும் கூட நிறுத்தாமல் "இயங்கிய" ஜோடி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நியூயார்க் நகரில் ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் வைத்து ஒரு ஜோடி உறவில் ஈடுபட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்து போலீஸார் வந்தனர். ஆனால் போலீஸார் தங்களைச் சூழ்ந்தபோதும் கூட அவர்கள் தங்களது சேஷ்டையை நிறுத்தாமல் தொடர்ந்தால் போலீஸாருக்குப் பெரும் கூச்சமாகிப் போய் விட்டது.

அந்த ஜோடியின் பெயர் நிக்கோல் ஜெர்மாக் மற்றும் மிக்கேல் சு என்பதாகும். இருவரும் சம்பவத்தன்று நியூயார்க்கில் உள்ள ஒரு மெக்சிகன் ஹோட்டலுக்குப் போனார்கள்.

ஹோட்டலுக்குப் போன இடத்தில் இருவருக்கும் மூடு செட் ஆகி விட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்கள் சாப்பாட்டை நிறுத்தி விட்டு ஹோட்டலின் மொட்டை மாடிக்கு யாருக்கும் தெரியாமல் நைஸாக நகர்ந்தனர். பின்னர் மாடிக்குப் போனதும் அக்கம் பக்கம் பார்த்து விட்டு வேலையை ஆரம்பித்தனர்.

Couple 'caught having sex' on roof of Mexican restaurant 'carried on despite cops arriving'

ஆனால் அவர்கள் மேலே செய்து கொண்டிருந்ததை சாலையில் போவோர் வருவோர் தெளிவாகக் காண முடிந்தது. என்னடா அக்கிரமம் இது என்று ஷாக் ஆகிப் போனவர்கள், போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.

போலீஸார் வந்ததை அந்த ஜோடியும் பார்த்தது. ஆனாலும் கவலைப்படாமல் தொடர்ந்துள்ளனர் தங்களது சேஷ்டையை. நிறுத்துங்க நிறுத்துங்க என்று போலீஸார் பலமுறை கூறியும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் போலீஸாருக்குத் தர்மசங்கடமாகி விட்டது.

போலீஸார் சொல்லியும் கூட நிறுத்தாமல் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தனர். அதன் பின்னர் சேஷ்டையை நிறுத்திய அவர்கள் போலீஸார் தங்களை நெருங்குவதற்குள் அங்கிருந்த ஜன்னல் வழியாக பக்கத்து கட்டடத்திற்குத் தாவி ஓடி போய் விட்டனர். இருப்பினும் போலீஸார் துரத்திச் சென்று இருவரையும் பிடித்துக் கைது செய்து விட்டனர்.

இருவருக்கும் கோர்ட்டில் 1800 டாலருக்கு ஜாமீன் தரப்பட்டது. பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+