3 நிமிடத்தில் ஒரு திருமணம்.. கணவனும், மனைவியும் வேறு நாட்டில்.. ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!
வாஷிங்டன்: 3 நிமிடத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றால் நம்ப முடிகிறதா. அமெரிக்காவில் அதுதான் நடந்தது.
அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நடுவே தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு மக்கள் இடம் பெயருவதை தடுக்க இனிமேல் இரு நாடுகள் மத்தியில் சுவர் எழுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நெருக்கடிகளால் மெக்சிகோவில் வசிப்போருக்கு அமெரிக்கா வர எளிதில் விசா கிடைப்பதில்லை. இந்த நிலையில், மெக்சிகோவை சேர்ந்த ரேயஸ் என்ற பெண்ணுக்கும், அமெரிக்காவை சேர்ந்த ஹூஸ்டன் என்ற ஆணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. ஆனால் பார்டரில்.
|
அவசர திருமணம்
இதற்காக எல்லையிலுள்ள 'டோர் ஆப் ஹோப்' என்ற கதவு 1 மணி நேரம் திறக்கப்பட்டது. மணப்பெண்ணும், மணமகனும் எல்லையில் வைத்து மோதிரம் மாற்றியும், ஆவணங்களில் கையொப்பமிட்டும் திருமணம் செய்தனர். ஆனால் எல்லாம் 3 நிமிட நேரம்தான்.

தம்பதிகள் வேறு நாட்டில்
கண்ணீருடன், முத்தங்கள் பரிமாறப்பட 4வது நிமிடத்திலேயே இருவரும் தங்கள் தங்கள் தேச எல்லைக்குள் வர வேண்டியதாயிற்று. ஆம்.. மணப்பெண் ரேயசுக்கு அமெரிக்க விசா தரப்படவில்லை. தம்பதிகள் தங்கள், தங்கள் நாட்டிலேயே இருக்க வேண்டியதுதான். தனது மனைவிக்கு விசா கிடைத்துவிடும் என்று ஹுட்சன் கூறினாலும், ட்ரம்ப் மனநிலையை பார்க்கும்போது அது இப்போதைக்கு நடக்காது என்றே தெரிகிறது.

அன்பை தடுக்கும் வேலிகள்
அதேநேரம் பிரண்ட்ஷிப் பார்க் என்ற இடத்தில் உள்ள கேட், வாரந்தோறும் திறக்கப்படும். சில மணி நேரங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை வேலிகளின் அருகே நின்று சந்தித்து பேசிக்கொள்ள முடியும். ஆனால் இரு நாட்டவர்களும் எல்லையை கடக்க முடியாது.

உறவினர்கள் கஷ்டம்
பேரக்குழந்தைகளை பார்க்க முடியாத பாட்டி, தாத்தாக்கள், உறவினர்களை சந்திக்க முடியாத ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என இரு நாடுகளிலும் வசிப்போரின் துயரம் சொல்லி மாளாது. ஒருவேளை மெக்சிகோ போய் தங்கள் உறவுகளை பார்த்தால் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்காதோ என்ற அச்சம், அவர்களை கட்டிப்போட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications