ரக்கூன் நாய்களிடம் இருந்துதான் கொரோனா பரவியதா? நிபுணர்கள் குழு கொடுத்த பரபரப்பு தகவல்!
பீஜிங்: சீனாவின் உகான் நகரில் இருக்கும் கடல் உணவு சந்தையில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றுகள் கிடைத்து இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்தடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் வியாபித்தது.
அதன்பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் கொரோனா ஆட்டி படைத்தது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கியது.

கொரோனா கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் தினசரி லட்சக்கணக்கான பாதிப்புகள் பதிவாகின. இந்தியாவிலும் கொரோன பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் என்ற ஆயுதத்தை சர்வதேச நாடுகள் கையில் எடுத்தன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியை பின்பற்றுதல் என பல கட்டுப்பாடுகள் விதித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா குற்றச்சாட்டு
அதன்பிறகு தடுப்பூசி வந்த பிறகே தொற்று பாதிப்பு ஓரளவு குறையத்தொடங்கியது. இப்படி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் இருக்கு வைரஸ் தொடர்பான ஆய்வகத்தில் இருந்தே கசிந்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால், சீனா இதை முற்றிலும் மறுத்தது. ஆனாலும் சீனாவின் மீதான சந்தேகப் பார்வை உலக நாடுகளிடம் இருந்து முற்றிலும் நீங்கிய பாடில்லை.

நாய்களிடம் இருந்து கொரோனா பரவியதா
இதனால், கொரோனா முதன் முதலாக பரவியது எப்படி? கொரோனாவை திட்டமிட்டே சீனா பரப்பியதா? என்ற ஆய்வுகள் எல்லாம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், உகான் நகரில் தொற்று பாதிப்பு ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவையிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள்குழு தெரிவித்துள்ளது. உகான் நகரில் உள்ள கடல் உணவுபொருட்கள் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாகவும் அந்த வகையான நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றிதழ்கள் கிடைத்து இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

எப்படி பரவியிருக்கலாம்?
எனினும், ரக்கூன் நாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதா? அல்லது மனிதர்களுக்கு இந்த நாய்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் வன விலங்குகளிடம் இருந்து தான் வைரஸ் பரவியிருக்கலாம் என்று சூழ்நிலையை சுட்டிக்காட்டுவதாக அமைந்து இருப்பதாகவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications