For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளத்தின் தேசிய விலங்காக பசு அறிவிப்பு... கொல்லவும் தடை!

Google Oneindia Tamil News

காட்மாண்டு: நேபாள நாட்டின் தேசிய விலங்காக பசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வந்த நேபாள அரசு தற்போது பசுவை தேசிய விலங்காக அறிவித்துள்ளது. மேலும், தேசிய விலங்காக பசு இருப்பதால், அதை கொல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Cow becomes national animal of Nepal

இதனை அந்நாட்டின் நேபாளி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சித்துலா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இறைச்சிக்காக பசுவைக் கொலை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்று நேபாளத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிலப்பல காரணங்களால் அது நீக்கப்பட்டது.

இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவித்துள்ளது நேபாளம். மதச்சார்பற்ற நாடாக தமது அரசியலமைப்பை மாற்றிக்கொண்ட நேபாளம், தற்போது இந்துக்களின் புனித விலங்கான பசுவை தேசிய விலங்காக அறிவித்துள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகத்தை தேசிய விலங்காக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

English summary
Cow, which is sacred to Hindus, has been declared the national animal of Nepal in the country’s newly-unveiled secular Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X