முதலைமேல் உருண்டு விழுந்த குண்டுப் பெண் - ஆபத்தான நிலையில் “ஐசியு” வில் முதலை!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு விபத்தில் முதலையின் மேல் குண்டுப் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியயையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர் செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த மினி பஸ்சில் "பெட்யா" என்ற முதலை ஒன்றை எடுத்து சென்றனர்.

அந்த பஸ்சில் சர்க்கஸில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் சென்றனர்.முதலையானது 2 மீட்டர் நீளம் உடையது.

கட்டுப்பாட்டை இழந்த பஸ்:

கட்டுப்பாட்டை இழந்த பஸ்:

சர்க்கஸ் மினி பஸ்சில் முன்பக்கம் பாதுகாப்பான முறையில் முதலையும், பின்பக்கம் ஊழியர்களும் இருந்தனர். பேருந்து ரஷ்யாவில் உள்ள முர்மான்ஸ்க்கில் இருந்து செவரோமோர்ஸ்க் என்ற பகுதிக்கு மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த சுவரில் மோதியது.

தூங்கிய முதலை:

தூங்கிய முதலை:

இந்த விபத்தில் பேருந்தின் உள்ளே உட்கார்ந்திருந்த சர்க்கஸின் கணக்காளர் சீட் பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டார்.இவர் 120 கிலோ எடையுள்ள ஒரு குண்டு பெண். இவர் மிகச்சரியாக அவர் தூங்கிக்கொண்டிருந்த முதலையின் மீது விழுந்ததால் முதலைக்கு படுகாயம் ஏற்பட்டது.

ஐசியுவில் முதலை:

ஐசியுவில் முதலை:

தொடர்ந்து மூன்று மணிநேரமாக முதலைக்கு வாந்தி ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அந்த முதலை அனுமதிக்கப்பட்டுள்ளது.

குண்டு பொண்ணு தப்பிச்சுது:

குண்டு பொண்ணு தப்பிச்சுது:

முதலையின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த குண்டு பெண்ணுக்கு சிறிய காயமே ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+