துபாயில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்க ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த தாதா தாவூத் இப்ராஹிம்
துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் துபாயில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்க ரூ.50 லட்சத்து 82 ஆயிரம் முன்பணம் அளித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவாவில் ஷியாம் கிஹோர் என்ற பிளாக் ஸ்கார்பியன் கைது செய்யப்பட்டார். அவர் தாவூத் கும்பலைச் சேர்ந்தவர். அவரின் கைது தாவூதுக்கு பெரும் அடியாக உள்ளது. அபுசலீமுக்கு தண்டனை கிடைத்துள்ளது சட்டம் அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்கும் என்ற செய்தியை நிழல் உலகத்திற்கு தெரிவித்துள்ளது.

தாவூத் தற்போது என்ன செய்கிறார்?
தாவூத் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். அவர் கராச்சியில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அவர் துபாயிலும் ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. தாவூத் கராச்சியில் இருந்து துபாயில் உள்ள யாசிர் என்பவருடன் போனில் பேசியபோது விவரங்கள் தெரிய வந்தது.
துபாயில் கட்டிட திட்டம் வர உள்ள ஒரு நிலம் பற்றி தாவூத் விசாரித்துள்ளார். அந்த நிலத்தை வாங்குவது நல்ல முதலீடு, அதற்கு ரூ.50 லட்சத்து 82 ஆயிரம் முன்பணம் தேவை என்று யாசிர் தெரிவித்துள்ளார். அலி யாகூப் என்பவர் மூலம் பணத்தை அனுப்புமாறு யாசிர் தாவூதிடம் தெரிவித்துள்ளார். கராச்சியில் இருந்த அலி மூலம் பணம் துபாய் சென்றுள்ளது.
இந்த போன் உரையாடலை அடுத்து அலி கராச்சியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு துபாய் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அந்த நிலத்தை வாங்க முன்பணம் அளிக்கப்பட்டுள்ளது.
தாவூதின் குரல் தான்
போனில் பேசியது தாவூத் இப்ராஹிமே தான் என்று உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். அவர் கராச்சிக்கு வெளியில் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் கராச்சியை விட்டு வெளியேறவே இல்லை. அவர் அண்மையில் ஐஎஸ்ஐ உதவியுடன் வங்கதேசம் சென்றுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் அவர் யாரையோ சந்தித்து பேசியுள்ளார் என்று அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் ஏன்?
தாவூத் எப்பொழுதுமே ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்து வருகிறார். அதற்காக அவரின் போதைப் பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் முடங்கிப் போய்விடவில்லை. போதைப் பொருள், ஆயுத வியாபாரங்கள் ஐஎஸ்ஐ உதவியுடன் நடக்கிறது. ஆனால் அவற்றில் நேரடியாக தலையிட வேண்டாம் என தாவூதுக்கு ஐஎஸ்ஐ அறிவுரை வழங்கியுள்ளது.
முன்பெல்லாம் தாவூத் தான் தனது ஆட்களுக்கு போன் செய்வார். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாவூத் செய்யும் போன் அழைப்புகள் இந்தியா தவிர அமெரிக்காவாலும் கண்காணிக்கப்படுகிறது என்பது ஐஎஸ்ஐக்கு தெரியும்.
ரியல் எஸ்டேட் தொடர்பான போன் உரையாடல்களால் பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது. அதே சமயம் போதைப் பொருள் அல்லது ஆயுத வியாபாரம் குறித்த போன் உரையாடல் சர்வதேச ஏஜென்சீக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நினைக்கிறது ஐஎஸ்ஐ.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications