தனியார் லாக்கரில் மறைத்து வைக்கப் பட்ட 6 குழந்தைகளின் சடலம் மீட்பு- கனடாவில் பயங்கரம்
ஒட்டாவா: கனடாவில் தனியார் நிறுவன லாக்கர் ஒன்றில் ஆறு குழந்தைகளின் பிணம் மீட்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் வின்னிபெக் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு லாக்கர் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில், அதன் ஒரு லாக்கரில் இருந்து துர்நாற்றம் வருவதாக நிறுவனத்திற்கு புகார் வந்தது.

அதையடுத்து போலீசார் முன்னிலையில் அந்த லாக்கரை உடைத்துப் பார்த்த நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. காரணம் அதற்குள்ளாக பல மாதங்களுக்கு முன் இறந்த 6 குழந்தைகளின் சடலம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அந்த குழந்தைகள் 6 பேரும் ஒரு மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குட்பட்ட வயதுடையவர்கள் என்றும், அவர்களது உடல் வெவ்வேறு காலகட்டத்தில் லாக்கரில் மறைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அது யாருடைய லாக்கர் என விசாரித்து வருகின்றனர். அதேபோல், அவை யாருடைய குழந்தைகள் ? எவ்வாறு அவற்றை இந்த லாக்கரில் கொண்டு வந்து வைத்தார் என்ற கேள்விகளுக்கும் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications