ஆ.. தைவான் நபரின் பல்லில் முளை விட்ட கொய்யா!
தைபே: தைவானில் நோயாளி ஒருவரின் வாயில் பல் ஒன்றில் கொய்யாச் செடி முளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானில் 36 வயது மனிதர் ஒருவர் கடந்த சில நாட்களாக பல் வலியில் அவதிப் பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
அங்கு அவரது பற்களைச் சோதித்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது விஸ்டம் டூத் எனப் படும் ஞானப்பல்லில் கொய்யா விதையொன்று முளை விட்டிருந்தது.

நோயாளி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொய்யாப்பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது கடைவாய்ப் பல்லில் விதை ஒன்று சிக்கியுள்ளது. அதனை அவர் சரிவர பல் துலக்கி வெளியேற்றவில்லை. இதனால், பல் இடுக்கில் இருந்த இடைவெளியில் அந்த கொய்யா விதை முளை விட்டுள்ளது. இதனால் தான் அவருக்கு கடுமையான பல்வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர், மருத்துவர் கொய்யா விதை முளை விட்டிருந்த பல்லை வாயிலிருந்து உரிய முறையில் பிடுங்கி எடுத்தார்.
பிடுங்கப் பட்ட பல்லில் இருந்த கொய்யா விதை 10 நாள் வளர்ச்சி உடையதாக இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications