அத்தனை பேருக்கு நடுவே.. மெஸ்ஸி கட்டிப்பிடித்தது அவர் அம்மாவை இல்லையாம்! யார் அந்த பெண்? நடந்தது என்ன
டோஹா: கத்தாரில் நடந்து முடிந்த FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதனையடுத்து மைதானத்தில் பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர் ஒரு பெண்மணியை கட்டிப்பிடித்தார். இது அவரது தாய் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தற்போது இது உண்மையா? பொய்யா? என Alt News விளக்கி இருக்கிறது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் FIFA 2022 உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி பரபரப்பாக நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பினயனான பிரான்ஸை அர்ஜென்டினா தீரமுடன் எதிர்கொண்டது. பிரான்சும் விடாமல் போராடின. இரு தரப்பிலும் தலா மூன்று கோல்கள் அடிக்கப்பட்டது.

வெற்றி
இதனையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 4-2 என்கிற முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இது அர்ஜெண்டினாவுக்கு மூன்றாவது வெற்றியாகும். மட்டுமல்லாது 2002ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள்தான் உலக கோப்பையை தொடர்ந்து வென்றிருக்கின்றன. ஆனால், இம்முறை இந்த வெற்றி மூலம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா ஐரோப்பிய நாடுகளின் கனவை தகர்த்தெறிந்துள்ளது. இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற சில நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் இறங்கி பல முக்கிய நபர்கள் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தாய்?
அந்த வகையில் திடீரென ஒரு பெண்மணி மெஸ்ஸியை நோக்கி வந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்மணியை மெஸ்ஸி கட்டி பிடித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. அதாவது, மெஸ்ஸி கட்டிப்பிடித்த அந்த பெண்மணி அவருடைய தாயார் எனவும் வெற்றி மகிழ்ச்சியில் அவர் தனது தாயை கட்டிப்பிடித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டன. இந்த தகவலை பிரபல செய்தி ஊடகங்களான NDTV, Hindustan Times, Republic World, Times Now, The Statesman, Indian Express போன்ற செய்தி சேனல்களும் உறுதி செய்தன.

உண்மை என்ன?
ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து AltNEWS செய்தி நிறுவனம் ஆராயத் தொடங்கியது. இதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மெஸ்ஸி கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னது அவரது தாய் கிடையாது என்று தெரிய வந்தது. ஏனெனில் இருவரின் புகைப்படத்திற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்மணி யார் என்று பரவலாக கேள்வி எழுந்தது. எனவே மெஸ்ஸி தொடர்புடைய பழைய புகைப்படங்களை AltNews ஆராய்ந்தது. அதே நேரத்தில் டிவிட்டரில் இது குறித்து வேறு யாராவது தகவல்களை பகிர்ந்திருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தாய் அல்ல.. வேறு யார்?
அப்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. அதில் சில நாட்களுக்கு முன்னர் மெஸ்ஸியும் அந்த பெண்மணியும் இருக்கின்றனர். இந்த படத்தில் உள்ள பெண்மணியின் கையில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. இதே போன்று கையில் பச்சை குத்தியிருந்த பெண்ணைதான் மெஸ்ஸி இரு தினங்களுக்கு முன்னர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். அதேபோல டிவிட்டரிலும் இப்பெண்மணியின் படத்தை பகிர்ந்துள்ள 'ராய் நெய்மர்' இப்பெண்மணி அர்ஜென்டினா அணியின் தலைமை சமையல் கலைஞர் என்று கூறியுள்ளார். ராய் நெய்மர் அர்ஜென்டினா அணி குறித்த தகவல்கள் தொடர்ந்து பகிர்ந்து வருபவராவார். இதனையடுத்து மெஸ்ஸி கட்டிப்பிடித்தது அவரது தாய் அல்ல. என்பது உறுதிசெய்துள்ளதாக AltNews தெரிவித்திருக்கிறது. இப்பெண்மணியின் பெயர் அன்டோனியா ஃபரியாஸ் என்றும் AltNews கூறியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications