ஆஹா மொத்தமா மாறுதே! சீன கப்பலை ஆய்வுக்காக அனுமதிக்கவில்லை- ட்விஸ்ட் வைத்த மாலத்தீவு! என்ன நடக்கிறது?
மாலத்தீவு: இந்தியா-மாலத்தீவு இடையே தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், திடீரென சீன கப்பல் விவகாரத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
மாலத்தீவு அதிபராக என்று முய்சு பதவியேற்றுக் கொண்டாரோ அப்போது முதலே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு, தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், இப்போது திடீரென மாலத்தீவின் டோன் மாறி இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மோதல்: இந்தியா மாலத்தீவு இடையே மோதல் இருப்பது ஒரு பக்கம் என்றால் மாலத்தீவு தொடர்ந்து சீன ஆதரவு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகச் சீனாவின் உளவு கப்பல்கள் எனச் சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு மாலத்தீவு கரைக்கு வர அனுமதி தரப்பட்டது. அதிலும் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாகச் சீன உளவு கப்பலுக்கு மாலத்தீவு அனுமதி அளித்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மாலத்தீவு டோன் மாறியுள்ளது. சமீபத்தில் தான் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தயவு செய்து மாலத்தீவுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கிடையே இப்போது சீன கப்பல் விவகாரத்திலும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடலின் அமைதியும் பாதுகாப்பும் முக்கியம் தான் என்ற மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், சீனக் கப்பலை மாலத்தீவு கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக தங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியப் பெருங்கடலின் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது இந்தியா மட்டுமின்றி எங்களுக்கும் முக்கியம் தான். எனவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் மற்ற நாடுகளுடன் இணைந்தே செயல்படுவோம்" என்றார்.
விளக்கம்: சீனக் கப்பல் விவகாரத்தை விவரித்த அவர், "எங்கள் அரசு தனிப்பட்ட மற்றும் நட்பு முறையில் சீன கப்பல்களுக்கு அனுமதி அளித்தோம். அதுவும் அவர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்தே அனுமதி தந்தோம். இது மாலத்தீவில் பொதுவான செயல்முறை தான். அதாவது ஒரு அமைதியான நாடாக இருக்கும் நாங்கள், அமைதியான நோக்கத்திற்காக வரும் கப்பல்களை வரவேற்கிறோம்.
"தயவு செய்து வாங்க.." இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் வைத்த கோரிக்கை.. பொருளாதாரமே ஆடி போச்சு
ஆனால் அவை மாலத்தீவு கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக வரவில்லை.. சீனக் கப்பலை மாலத்தீவு கடலில் ஆராய்ச்சி செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை. அந்தத் தகவலில் உண்மை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
சீன கப்பல்: கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சீனக் கடல் ஆராய்ச்சிக் கப்பல் சியாங் யாங் ஹாங் 3 மாலத்தீவு கடற்பரப்புக்குச் சென்றது. கடந்த இரண்டு மாதங்களில் சீன கப்பல் மாலத்தீவு பகுதிக்கு வருவது இது இரண்டாவது முறை... மாலத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்தாலும் சீனக் கப்பல் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் கடந்த மாதம் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்: அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மாலத்தீவு கடல் பரப்பில் எந்த ஆராய்ச்சியும் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. சீன கப்பல் தங்களுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றார்கள்.. பணியாளர்களை மாற்றினார்கள். விமானத்தில் வந்தவர்கள் படகில் ஏறினர், படகில் இருந்தவர்கள் விமானம் வழியாகப் புறப்பட்டனர். இதற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது" என்று விளக்கமளித்துக் குறிப்பிடத்தக்கது
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications