ஜாய்ஃபுல் சிங்கப்பூர்.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ரயில்.. கலக்குறாங்கப்பா!
சிங்கப்பூர்: தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவது இந்தியாவா அல்லது இந்தியாவுக்கு வெளியேவா என்று கேட்க வேண்டும் போல. அந்த அளவுக்கு வெளிநாடுகளிலும் தீபாவளி வெகு வேகமாக பரவி வருகிறது. அதிலும் சிங்கப்பூர் இதில் ஒரு படி மேலே போய் இந்தியாவையே மிஞ்சி விட்டது.
தீபாவளியையொட்டி சிறப்பு தீபாவளி தீம் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளனர் சிங்கப்பூர்காரர்கள். சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம். அதிலும் தமிழர்கள் பெரும்பான்மயானவர்கள். இந்த நிலையில் தீபாவளியையொட்டி ஸ்பெஷல் தீம் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள மின்சார ரயில் (அதாவது எம்ஆர்டிஎஸ்) ஒன்றை தீபாவளியை வைத்து அலங்காரப்படுத்தி அசத்தியுள்ளனர். அந்த ரயிலுக்குள் இந்தியாவின் விசேஷங்களான ரங்கோலி, தீப விளக்குகள், பட்டாசுகளின் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

தீபாவளி தீம் ரயில்
அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் தரைப் போக்குவரத்து ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்திலும் தீபாவளி தொடர்பான படங்களைப் போட்டு கலக்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் தீம் ரயில் அக்டோபர் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தாமரையும், மயிலும்
இந்தியாவின் நகைகள், மயில், தாமரை உள்ளிட்ட பல இந்திய அம்சங்கள் இந்த ரயிலில் ஜொலிக்கின்றன. மேலும் அழகு அழகான ரங்கோலி கோலங்கள் பார்ப்போர் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

லிட்டில் இந்தியா
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில்தான் வழக்கமாக இதுபோன்ற கொண்டாட்டங்கள் தூக்கலாக இருக்கும். அதை தற்போது ரயிலுக்கும் ஷிப்ட் செய்து விட்டனர்.

நவம்பர் வரை
இந்த சிறப்பு ரயில் நவம்பர் மாதம் மத்தி வரை இயங்கும். வடக்கு கிழக்கு பிரிவில் இந்த ரயில் இயங்கும். இந்த ரயிலை சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தொடங்கி வைத்தார்.
ஹேப்பி தீபாவளி சிங்கப்பூர் ஃபோக்ஸ்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications