"சுவாச கோளாறு.." குழந்தைகளிடையே பரவும் நிமோனியா பயங்கரம்! சீனாவில் இப்போது உண்மையில் என்ன நிலைமை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவில் நிமோனியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது சீனாவில் களநிலவரம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சீனாவில் கடந்த சில காலமாக அதிகரிக்கும் திடீர் நிமோனியா உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதிகளில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Do we need to worry as China is struggling with Pneumonia Outbreak

சீன ஆய்வாளர்கள் இது புதுவித நோய்க் கிருமிகளால் ஏற்படவில்லை என்று விளக்கமளித்துள்ள போதிலும் இதை உலக நாடுகள் முழுமையாக நம்பவில்லை. ஏனென்றால் கடந்த 2019இல் முதலில் கொரோனா பரவிய போதும், கிட்டத்தட்ட இதேபோன்ற பதிலையே சீனா கொடுத்திருந்தது.

நிமோனியா பாதிப்பு: அதிலும் இப்போது சீனாவில் பரவும் நிமோனியா பாதிப்பு அங்குள்ள குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இந்தியா இரண்டு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் அறிக்கையில் சீனாவில் நிலவி வரும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் எந்தவொரு சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

நேற்று வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்றறிக்கையில், வடக்கு சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பதைச் சுட்டிக் காட்டி மாநிலத்தில் உள்ள பொதுச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது. சுவாச கோளாறு அங்கே அதிகரித்து வரும் நிலையில், ஆயத்த நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

மொத்தமாக முடங்கும் சீனா? திடீரென குழந்தைகளை குறிவைக்கும் நிமோனியா.. அடுத்த பெருந்தொற்றாக மாறுமா

சுவாச நோய்ப் பாதிப்பு: சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே இது குறித்து எச்சரித்துள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் சார்ஸ் போன்ற ஏற்கனவே நமக்குத் தெரிந்த வைரஸ்கள் காரணமாகவே சீனாவில் இப்போது நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவிடம் கூடுதல் தகவல்கள் கேட்டுள்ளதாகவும் தற்போதைய சூழலில் நாம் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இதில் முதலில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தான் கடந்த நவ.13ஆம் தேதி அலர்ட் கொடுத்தது. அதாவது குழந்தைகளிடையே சுவாச நோய்கள் அதிகரிப்பதாகக் கூறியிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு வரும் முதல் குளிர் காலம் என்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, சார்ஸ் என ஏற்கனவே தெரிந்த வைரஸ்களே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

வந்த பரபர அலர்ட்: கடந்த நவம்பர் 20ஆம் தேதி ப்ரோமெட் (ProMED) என்ற அமைப்பும் இது குறித்து எச்சரித்திருந்தது. கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே எச்சரித்த அமைப்புகளில் இந்த ப்ரோமெட் அமைப்பும் ஒன்று என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நிமோனியா பாதிப்பு சீனாவில் மோசமாக இருப்பதாகவும் அங்குள்ள மருத்துவமனைகளில் அதிகப்படியான குழந்தைகள் அட்மிட் ஆகி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல், நுரையீரல் வீக்கம் ஆகியவை தான் சீனாவில் இப்போது முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. நிமோனியா பாதிப்பு மோசமாக இருந்தாலும் கூட இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது சற்றே ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது. பெய்ஜிங்கில் குழந்தைகளுக்கு மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஆன்ட்டிபயாடிக்ஸ்களை கொண்டு எளிதாக இதற்குச் சிகிச்சை அளிக்கலாம்.

புது வைரஸ் இல்லை: உலகெங்கும் இருக்கும் மக்கள் பலரும் இது புது வகை கொரோனா அல்லது கொரோனாவை போன்ற ஒரு புதிய வகை வைரஸ் என்றே அஞ்சினார்கள். இருப்பினும், அதை மறுத்துள்ள சீனா, இவை ஏற்கனவே நமக்குத் தெரிந்த நோய்க் கிருமிகளால் தான் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

மேலும், அசாதாரணமாக எதுவும் தென்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தற்போது இருக்கும் டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது புது வைரஸ் ஏற்பட்டதற்கான அறிகுறி தென்படவில்லை என்றே சர்வதேச ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+