தீப்பெட்டி சைஸ் தான்.. ஆனா உலக அரசியலையே கண்ட்ரோல் செய்யும் வாடிகன்! தனித்துவங்கள் மிரள வைக்குதே
வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை (ஏப்ரல் 21) காலமானார். இது உலகெங்கும் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமாகக் கருதப்படும் போப் வசிக்கும் உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் குறித்து நாம் பார்க்கலாம்.
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான வாடிகன், உலகின் மிகச் சிறிய நாடாகும். வாடிகனுக்கு என தனியாக லத்தீன் மொழியில் தேசிய கீதம், தலைவர் (போப்) அவ்வளவு என் வாடிகனுக்கு தனியாக அரசு ஊடகம் கூட இருக்கிறது. போப் ஆண்டவர், கார்டினல்கள், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், தூதர்கள் உட்படச் சுமார் 900 பேர் இந்தச் சிறிய நாட்டில் வாழ்கிறார்கள்.

வாடிகன்
வாடிகன் நாட்டின் வாயில்களில் உலகின் பழமையான ராணுவமாக அறியப்படும் சுவிஸ் காவலர்கள் காவல் காக்கிறார்கள். அவர்களது நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் கலர் யூனிபாரம் உலகெங்கும் பிரபலமானது.. அவர்களுடன் சேர்த்து வாடிகன் காவல் படையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தக் குட்டி நாட்டின் மையப் பகுதியில் தான் போப் பிரான்சிஸ் வசித்து வருகிறார். உலகெங்கும் உள்ள 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராகவும் வாடிகன் நாட்டின் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
வரலாறு தெரியுமா
அதேநேரம் போப் ஆட்சி செய்யும் பகுதி என்பது கடந்த காலங்களிலும் இதே அளவுக்குச் சிறியதாக இருந்தது இல்லை. ஒரு காலத்தில் இத்தாலி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய பகுதி போப் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ரோமில் போப் வசித்து வந்தார். ஆனால், 1870களில் இத்தாலி ஆட்சியாளர்கள் போப் ஆட்சி செய் பகுதிகளைக் கைப்பற்றினர். ஜெனரல் ரஃபேல் கடோர்னா தலைமையிலான இத்தாலிய படைகள் இந்தப் பகுதிகளைக் கைப்பற்றி, தங்கள் ஆட்சியில் இணைத்தனர்.
குறிப்பாக ரோம் கைப்பற்றப்பட்டு, அது இத்தாலி தலைநகராக மாற்றப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அப்போதிருந்த போப் பியாஸ் IX வாடிகன் நகருக்குச் சென்றார். இத்தாலி அரசை விமர்சிக்கும் வகையில் வாடிகனில் வசிக்கும் கைதி என போப் பியாஸ் IX தன்னை தானே அறிவித்துக் கொண்டார். இத்தாலி மன்னருக்கும் போப்பிற்கும் ஒப்பந்தம் போடப்படும் வரை இதே நிலை தொடர்ந்தது. போப் பியாஸ் IXக்கு பிறகு போப் ஆகத் தேர்வானவர்களும் தங்களை வாடிகனின் கைதி என்றே குறிப்பிட்டனர்.
வாடிகனின் கைதி போப்
முதலில் போப் இருக்கும் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க இத்தாலி தயங்கியது. அதே தவிர மற்றவற்றைத் தர ரெடியாகவே இருந்தது. ஆனால், தனி நாடும் அதிகாரமும் இல்லை என்றால் பிற்காலத்தில் சிக்கல் வரலாம் என்பதால் அதை போப் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினை சில காலம் நீடித்தது. இறுதியாகக் கடந்த 1929ஆம் ஆண்டில், போப் பியஸ் XI போப்பாக இருந்தபோது ஒப்பந்தம் இறுதியானது.
அப்போது இத்தாலியை ஆட்சி செய்த பெனிட்டோ முசோலினிக்கும் போப் தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. போப் வசிக்கும் சிறிய பகுதியைத் தனி நாடாகவும் அதன் சுயாட்சி உரிமையையும் தர முசோலினி ஒப்புக்கொண்டார். இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம் 1929ல் கையெழுத்தானது. இத்தாலி அந்த குறிப்பிட்ட பகுதியில் போப்பின் இறையாண்மையை அங்கீகரித்தது.

எவ்வளவு சிறியது
44 ஹெக்டேர், அதாவது 109 ஏக்கர் பரப்பளவை மட்டுமே கொண்ட நாடாக வாடிகன் இருக்கிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகக் கிண்டி வளாகம் 223 ஏக்கராகும். அதில் பாதிக்கும் குறைவான பகுதியை மட்டுமே கொண்ட நாடாக வாடிகன் இருக்கிறது. இந்தக் குட்டி நாடு நேரடியாக போப் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தோட்டங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு ஆட்சி செய்யும் அரசை ஹோலி சீ என குறிப்பிடுவார்கள். இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இறையாண்மை கொண்ட நீதித்துறை அமைப்பாகும். அங்குள்ள திருச்சபையை ரோமன் கியூரியா என்பது நிர்வகிக்கிறது. இந்த ரோமன் கியூரியா என்பது வாடிகன் செயலாளர், 16 அமைச்சகங்கள், ஆறு நிதி நிறுவனங்கள் மற்றும் பல கல்விக்கூடங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
சட்டம் என்ன!
அங்குள்ள சட்ட அமைப்பு என்பது இத்தாலியில் இருக்கும் சட்ட அமைப்பைப் போன்றது. சட்டத்தை மீறுபவர்கள் வாடிகனில் உள்ள சிறிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். அது குறித்த தகவல்களை வாடிகன் அரசு ஊடகம் வெளியிடும். வாடிகன் அரசு ஊடகம் மொத்தம் 30 மொழிகளில் செய்திகளை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
வாடிகனில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வருமான வரி எதுவும் இல்லை. மேலும், அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவசமாக மருத்துவச் சேவை கிடைக்கும். அதேநேரம் வாடிகனில் உள்ள பணியாட்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கவோ அல்லது சேரவோ முடியாது. வாடிகன் மக்களுக்காக அங்கு ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட், தபால் அலுவலகம் மற்றும் மருந்தகம் உள்ளன.

சிறிய அமைப்புகள்
மேலும், வாடிகன் மக்களும் அங்கு வேலைக்கு வருவோரும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக உலகின் மிகச்சிறிய தேசிய ரயில் நெட்வொர்க்கும் வாடிகனில் இருக்கிறது. ஒரே ஒரு ரயில் மட்டுமே வந்து நிற்கும் வகையில் குட்டி ரயில்வே ஸ்டேஷனும் இருக்கிறது. இது பயணிகளை இத்தாலி தலைநகர் ரோமுக்கு அழைத்துச் செல்கிறது. இது மட்டுமின்றி வாடிகனுக்கு வங்கியும் இருக்கிறது. நாடு சிறியது என்றாலும் உலகெங்கும் இருந்து வரும் பல பில்லியன டாலரை இந்த வங்கி கையாள்கிறது.
வாடிகனின் தேசிய கீதமாக "பொன்டிஃபிகல் மார்ச்" என்ற பாடல் இருக்கிறது. சுமார் 3.14 நிமிடங்கள் பாடப்படும் வாடிகன் தேசிய கீதம் தான் உலகில் லத்தீன் மொழியில் பாடப்படும் ஒரே தேசிய கீதமாகும். வாடிகன் நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்ற போதிலும், அங்கு அதிகாரப்பூர்வ கரன்சியாக கடந்த 2002 முதல் யூரோ தான் இருந்து வருகிறது.
இந்த வினோதம் தெரியுமா
வாடிகனில் மற்றொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது அங்குக் கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு குழந்தையும் பிறந்ததே இல்லையாம். அங்கு மிக குறைந்த அளவிலேயே மக்கள் வசிக்கிறார்கள். அவர்களும் கூட பெரும்பாலும் போப்பால் நியமிக்கப்படுவோர் தான். அப்படியே பெண் யாராவது கருவுற்றாலும் அருகே ரோம் மருத்துவமனைக்கே பிரசவத்திற்குச் செல்ல வேண்டுமாம். ஏனென்றால் வாடிகனில் அதற்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் வாடிகனில் பல ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு என்பது நடந்ததே இல்லை!
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications