ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. ஒரு பில்டிங் கூட இடியல.. சென்னை நிலவரம் தெரியுமா?
டோக்கியோ: ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் அங்கு ஒரு பில்டிங் கூட இடிஞ்சு விழாமல் இருக்கிறது என்றால், அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் உள்ள ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம், மழை வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடாகும். குறிப்பாக அடிக்கடி நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கும் ஆபத்து உள்ள நாடாக இருக்கிறது. அடிக்கடி நிலநடுக்கம் உள்ளிடட் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு அனுபவத்தை பெற்ற ஜப்பான், ஒரு கட்டத்தில் வீடுகள் அனைத்தும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மாற்றத்தொடங்கியது.

ஜப்பானிய வீடுகள் பொதுவாக நெகிழ்வானதாகவும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நெகிழ்வான கதவுகள், கட்டுமானம் மற்றும் சுவர்கள் மற்றும் தரைக்கு இடையில் நெகிழ்வான இணைப்பு போன்ற காரணங்களால் நிலநடுக்கம் வந்தாலும், வீடுகள் பாதிக்கப்படுவது இல்லை..
அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வந்தாலும் தாங்க கூடிய அளவிற்கு கட்டமைப்பிற்கு மாறி உள்ளன. நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் அங்கு வீடுகளை யாராக இருந்தாலும் கட்ட முடியும். அந்த அளவிற்கு அவர்கள் மாறிவிட்டார்கள். இதனால் தான் இன்று 7.6 அளவில் நிலநடுக்கம் வந்த போதிலும் அங்கு ஒரு பில்டிங் கூட இடிஞ்சு விழாமல் இருக்கிறது. அதேபோல அடிக்கடி சுனாமி, மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதால், அதையும் தாங்கி கொள்ளும் வகையில் வீடுகளை மாற்றி வருகிறார்கள் ஜப்பான் மக்கள். கடந்த 2022ம் ஆண்டு ஜப்பானிலுள்ள வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான Ichijo Komuten' நிறுவனம், வெள்ளம் ஏற்பட்டால் மிதிக்கும் வகையிலான வீடு ஒன்றை அறிமுகம் செய்து ஆச்சர்யப்பட வைத்தது.
இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனா அங்க பாருங்க ஒரு பில்டிங் கூட இடிஞ்சு விலாம இருக்கு😳 pic.twitter.com/yB39gfBPyk
— தேவா (@gdeva88) January 1, 2024
இந்த மிதக்கும் வீடுகள் பார்க்க சாதாரண வீடுகளைப் போலத்தான் இருக்கும் என்றாலும் தடிமனான இரும்பு கம்பிகளால் இந்த வகை வீடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தரையுடன் தடிமனான கேபிள்கள் மூலம் வீடுகள் இணைக்கப்படும். வெள்ளம் ஏற்படும்போது இந்தக் கேபிள்கள் வீட்டை மேலே தூக்கிவிடுமாம். அதேநேரம் தண்ணீர் வடிந்த பிறகு, மீண்டும் தரையுடன் வீடு இணைந்துவிடுமாம். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், 15 அடி உயர வெள்ளத்திலும் இந்த வீடு மிதக்குமாம். மின்சார பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, மின்கம்பிகள் அனைத்தும் மேல்நோக்கி பொருத்தி உள்ளார்கள். இதுபோன்ற வீடுகள் இப்போது ஜப்பானில் பேமஸ் ஆகி உள்ளது.
இதை அப்படியே ஒரு பக்கம் இருக்கட்டும்.. சென்னையை பற்றி பார்ப்போம். கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையின் படி,
சென்னையில் உள்ள 80 சதவீத கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது அல்ல.. சென்னையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட இந்த கட்டடங்கள் இடிந்துவிழக்கூடிய அளவிலேயே உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
2011ம் ஆண்டு வெளியான அந்த அறிக்கையின் படி "சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகள் தரைதளம் மற்றும் ஒரு மாடி வீடுடன் கூடியதாகவே இருக்கிறது. இத்தகைய வீடுகளில் பெரும்பாலானவை முறையான என்ஜினியர்களால் கட்டப்பட்டவை அல்ல. கட்டுமான பொறியாளர்கள் யாரையும் நியமித்து வீட்டு உரிமையாளர்கள் இந்த வீடுகளை கட்டவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட 'பிளான்' ( plan) படியும் இந்த வீடுகள் கட்டப்படவில்லை.
முறையான வடிவமைப்பில் கட்டப்படாத இந்த 80 சதவீத கட்டடங்களும் எந்த நேரத்திலும் இடிந்துவிழக்கூடிய அளவில்தான் இருக்கிறது" என்றே அப்போது தெரிவிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் மக்கள் கட்டிடங்களை,நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கவேண்டும் என்பதில் உறுதியாகி உள்ளன. இப்போது உருவாகும் பல கட்டிடங்கங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் உருவாகின்றன.












Click it and Unblock the Notifications