"பாலியல் சுகம்.." ஆணுறுப்பில் சிக்கிய பேட்டரி.. கதறிய முதியவர்.. ஐயோ கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரின் ஆணுறுப்பில் திடீரென பேட்டரி ஒன்று சிக்கி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது.. இப்படி நடக்க என்ன தான் காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த உலகில் பல வினோதமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும் போது இப்படி கூட நடக்குமா என்றே நமக்குத் தோன்றும்.

நாம் கற்பனையிலும் நினைக்காத சம்பவங்கள் எல்லாம் கூட அங்கே அசால்டாக நடக்கும். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆணுறுப்பில் பேட்டரி: 73 வயதான ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரின் ஆணுறுப்பில் மூன்று பேட்டரிகள் சிக்கி இருக்கிறது. இதையடுத்து அந்த நபர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடி உள்ளார். அந்த நபர் தனது ஆணுறுப்பு சிறுநீர் குழாய்க்குள் பேட்டரிகளை வேண்டுமென்றே செலுத்தி உள்ளார். பாலியல் திருப்தியைப் பெற அவர் இப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. பேட்டரி என்றால் பெரிய பேட்டரி எல்லாம் இல்லை. அது வெறும் பட்டானி சைஸில் இருக்கும் சின்ன பேட்டரியாம்
இதற்கு முன்பும் பல முறை அவர் பாலியல் திருப்திக்காகத் தனது ஆணுறுப்பில் இதுபோல எதையாவது செருகி இருப்பதையும் அவர் மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இருப்பினும் இந்த முறை பே்டடரி சற்று மேலே நகர்ந்து சென்றுவிட்டதாம். இதனால் பல முறை அவரே முயன்ற போதிலும் அந்த பேட்டரியை அவரால் எடுக்க முடியவில்லை. அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளார்.
கடலுக்கு அடியில் பகீர் மாற்றம்! பசிபிக் தட்டில் திடீர் விரிசல் ஜப்பான் டூ நியூசிலாந்து வரை ஆபத்து
என்ன நடந்தது: சிறுநீர் குழாய் நெக்ரோசிஸ் பகுதியில் பேட்டரி சிக்கிக் கொண்டதால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறையாகும். இந்த பட்டன் பேட்டரிகளை ஆணுறுப்பில் செருகி 24 மணி நேரத்திற்குப் பிறகு தான் அவர் மருத்துவ உதவியை நாடி இருக்கிறார். அவருக்கு ஆணுறுப்பில் வலி, பாராஃபிமோசிஸ் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அந்த பேட்டரிகளை நீக்கிய நிலையில், அங்கே சுற்றி இருந்த செத்த திசுக்களையும் இரண்டே மணி நேரத்தில் நீக்கினர். ஆண்குறியைப் பாதிக்கும் ஒரு வகை சதை உண்ணும் நோயான ஃபோர்னியர்ஸ் கேங்க்ரீன் அவருக்கு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் அஞ்சினர். இருப்பினும், நல்வாய்ப்பாக அதுபோல எதுவும் ஏற்படவில்லை, அதேநேரம் அந்த பட்டானி சைஸ் பேட்டரியை அவர்களால் எளிதாக ஒன்றும் எடுக்க முடியவில்லை,
பேட்டரி லீக்: பல முயற்சிக்குப் பிறகு ஃபோர்செப்ஸைப் பயன்படுத்தியே அந்த பேட்டரிகளை அகற்ற முடிந்தது. அந்த பேட்டரிகள் மீது கருப்பு தார் போன்ற பொருள் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். ஒரு வழியாக இப்படி பெரும் போராட்டத்திற்கு அந்த பேட்டரியை அவர்கள் நீக்கிவிட்டார்கள். ஆனால், இத்துடன் இது முடியவில்லை. மீண்டும் 10 நாட்களுக்குப் பிறகு அந்த நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
ஆணுறுப்பில் திடீரென வீக்கம் ஏற்படுவதாக அவர் கூறியிருக்கிறார். மருத்துவர்கள் மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில், அப்போது தான் பேட்டரியில் இருந்து ஒரு வித திரவியம் லீக் ஆகி இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நபரின் ஆணுறுப்பில் பெரும்பகுதியை அகற்ற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
கடைசியில் என்ன நடந்தது: அந்த நபருக்குச் சிக்கலான காயம் ஏற்பட்ட நிலையில், அதன் சிகிச்சைக்கு ஆண்குறி சிறுநீர் குழாய் புனரமைப்புக்குத் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கருதியுள்ளனர். இந்த சிகிச்சையை முழுமையாக முடிக்க ஆறு மாதங்கள் வரை ஆகுமாம். இருப்பினும், ஆண்குறி மிக மோசமாகச் சேதமடைந்ததால் அதைச் சீரமைக்கவே முடியாது என்பதை மருத்துவர்கள் உணர்ந்து கொண்டனர். இதனால் அவர் தனது வாழ்நாள் முழுக்க அதே பிரச்சினை உடன் தான் இருக்க வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications