முதல்ல நாய் சாப்பிடட்டும்.. அப்புறம் நீங்க சாப்பிடுங்க பாஸ்... !
மெக்சிகோசிட்டி: மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் தாதாவான எல்சாபோவுக்கு தரப்படுகிற உணவை, முன்னதாக நாய்க்கு கொடுத்து சிறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்களாம்.
மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் தாதாக்களில் முக்கியமானவர் ஜாகுயின் எல்சாபோ கஷ்மன்.

ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரரான இவர், தனது சொந்த ஊரான சினாலோயா கார்டெலில் இருந்து அமெரிக்கா வழியாக கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தார்.
கடந்த 13 ஆண்டுகளாக இவரை மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் எல்சாபோ கைது செய்யப்பட்டு, அல்டிபிலானே சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும், சிறையில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பினார் எல்சாபோ. பின்னர் சினா லோவா மாகாணத்தில் அவர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல மணி நேர துப்பாக்க்சிச் சண்டைக்குப் பின்னர் மீண்டும் எல்சாபோ கைது செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியாகினர். சர்வதேச நாடுகள் தேடும் பட்டியலில் உள்ள எல்சாபோ தலைக்கு அமெரிக்கா ரூ. 33 கோடி பரிசுத்தொகை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எல்சாபோவை அவரது எதிரிகள் விஷம் வைத்துக் கொள்ளலாம் என சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு தரப்படும் உணவை, முன்னதாக நாய்க்கு கொடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
மேலும் இவரை சிறைக்குள் ஒரே அறையில் வைத்திருப்பதில்லை. உள்ளேயே அடிக்கடி மாற்றி வருகின்றனர். இதே சிறையிலிருந்துதான் முன்பு அவர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைக்கு அவரைக் கொண்டு வந்த புதிதில் ரொம்ப டென்ஷனாக இருந்தாராம் சாபோ. தற்போது அவர் நிதானமாக இருப்பதாகவும், புத்தகங்கள் படித்துப் பொழுதைப் போக்குவதாகவும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications