போரை தொடங்கும் டிரம்ப்? வெனிசுலாவை சுத்துப்போட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இருநாடுகள் இடையேயான இந்த பிரச்சனை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் தான் வெனிசுலாவை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் வகையில் அமெரிக்கா அந்த நாட்டை சுத்துப்போட்டு போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது. இதற்கு பதிலடியாக வெனிசுலா 5,000 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர்பதற்றம் அதிகரித்துள்ளது.
தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது. இது சிறிய நாடாகும். மொத்தம் 2.80 கோடி மக்கள் மட்டுமே உள்ளனர். வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ உள்ளார். வெனிசுலாவுக்கும், அமெரிக்காவும் ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்தன. ஆனால் தற்போது எதிரி நாடுகளாக மாறி உள்ளன. வெனிசுலாவும், அமெரிக்காவும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் அமைந்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹூகோ சாவேஷ் மற்றும் நிகோலஸ் மதுரோ ஆகியோரின் செயல்பாடு அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதற்கு அந்த நாட்டின் அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ தான் முக்கிய காரணமாகும்.
இவர் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்பும் முன்வைத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அதுமட்டுமின்றி நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரை கைது செய்ய உதவினால் ரூ.438 கோடி பரிசுத்தொகை தருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ உள்ளார். இவர் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டு கொண்டவதாக உள்ளார். போதைப்பொருட்களை கிரிமினல்கள் மூலமாக அமெரிக்காவுக்கு கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. இதற்காக கிரிமினல்களை அவர் கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதாக கூறி கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். தற்போது வெனிசுலாவில் ஆபரேஷனை தொடங்க அமெரிக்காவின் மத்திய உளவுத்துறைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் தான் அமெரிக்கா தனது பலத்தை வெனிசுலாவை சுற்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கும் போர் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டே ஹெக்சத் உறுதி செய்துள்ளார். இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் மற்றும் 5 டெஸ்ட்ராயர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளார்.
அதேபோல் பென்டகன் (பாதுகாப்பு அமைச்சகம்) செய்தி தொடர்பாளர் சியன் பர்னல் கூறுகையில், ‛‛ "புளோரிடாவின் USSOUTHCOM AORல் அமெரிக்காவின் படை பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் சமரசம் செய்வது கிடையாது'' என கூறியுள்ளார்.
அதேவேளையில் வெனிசுலா தரப்பில், ‛‛நாட்டை சுற்றி 5 ஆயிரம் ஏவுகணைகள் தயாராக வைத்துள்ளோம். அமெரிக்காவின் போர் விமானங்கள் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் ரஷ்யாவின் தயாரிப்பாகும். இந்த ஏவுகணைகள் தாக்க வரும் போர் விமானங்களை குறிவைத்து அழித்து வல்லமை கொண்டது. இதில் இக்லா - எஸ் ஏவுகணைகளும் உள்ளன. இது அதிக சக்தி வாய்ந்ததாகும். இது அமெரிக்க படைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். .
இதுதொடர்பாக அல் அஜிரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛ஏற்கனவே அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று மாலுமிகள், விமானப்படை வீரர்கள் என்று 6 ஆயிரம் பேருடன் கரிபீயன் சென்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் போர்க்கப்பல் கப்பல்கள்அனுப்பி மற்றும் 4 டெஸ்ட்ராய்டர்களுடன் சென்றுள்ளது. அதில் 4,500 வீரர்கள் உள்ளன. தற்போது விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளது'' என தெரிவித்துள்ளது. வெனிசுலாவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் துல்லியமாக தாக்க வேண்டும் என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications