ஒருவேளை உணவுக்கே அல்லாடும் மக்கள்.. குறிவைத்து கொன்று குவிக்கும் இஸ்ரேல்! இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்த நிலையில் உணவுக்காக வெளியில் நடமாடும் மக்களை குறிவைத்து இஸ்ரேல் ரோல் தாக்குதலில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இதுவரை 1700 குழந்தைகள் உட்பட 42000 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

israel hamas international

மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.

ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹைத்திக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.

தற்போது போர் காரணமாக நிவாரண முகாம்களிலும் வீடுகளிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினருக்காகவும் உணவு தேடி வெளியில் நடமாடுபவர்களை குறி வைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் லெபனானின் தங்கும் விடுதி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர். அந்த குறிப்பிட்ட தங்கும் விடுதியில் 18 பத்திரிகையாளர்கள் தங்கி இருந்த நிலையில் திட்டமிட்டு இஸ்ரேல் பத்திரிகையாளர்களை குறு வைத்து படுகொலை செய்து வருவதாக காசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த ஓராண்டில் காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் இதுவரை 1700 குழந்தைகள், 11 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 42,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களும், ஐநாவைச் சேர்ந்த 220 பணியாளர்களும் வழியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு எதிராக 'குறிப்பிட்ட ஒரு சில' இஸ்லாமிய நாடுகள் இன்னமும் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+