ஈமான் அமைப்பிற்கு துபாய் அரசின் சுகாதாரத்துறை நற்சான்றிதழ்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பிற்கு துபாய் அரசின் சுகாதாரத்துறை சிறப்புற ரத்ததான முகாமை நடத்தியமைக்காக நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த 11.04.2014 அன்று துபாய் அஸ்கான் ஹவுஸில் நடைபெற்ற ரத்ததான முகாமில் தமிழர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி தங்களது சமூக அக்கறையினை பறை சாற்றினர்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் பொதுச்சேவையில் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் விதமாக ரத்ததான முகாம் அமைந்திருந்தது.

இதனைப் பாராட்டும் முகமாக ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்த துபாய் ஈமான் அமைப்பிற்கு துபாய் அரசின் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நற்சான்றிதழை பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, செயலாளர்கள் முதுவை ஹிதாயத், ஏ ஹமீது யாசின், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், ஃபைஜுர் ரஹ்மான், ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாட்சா, முஹம்மது இக்பால் உள்ளிட்டோரிடம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications