கடலில் மூழ்கி தத்தளித்த பள்ளி முதல்வரை காப்பாற்றிய துபாய் போலீசார்
துபாய்: கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய பள்ளி முதல்வரை துபாய் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
50 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் உள்ள ஜுமைரா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவரும், அவரது நண்பர்கள் சிலரும் கடலில் குளித்தனர்.
அப்போது பள்ளி முதல்வர் நீச்சல் அடித்துக்கொண்டே கடலின் ஆழப் பகுதிக்கு சென்றுவிட்டார். சோர்வு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னை காப்பாற்று குரல் கொடுத்தார்.

அவரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கு பணியில் இருந்து போலீசாரிடம் உதவி கேட்டனர். போலீசார் உடனே வந்து பள்ளி முதல்வரை பத்திரமாக மீட்டனர்.
கடல் நீரை குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை கரையில் படுக்க வைத்து போலீசார் முதல் உதவி அளித்தனர். அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications