துபாயில் இடியுடன் கொட்டிய பேய்மழை... 7 மணி நேரத்தில் 253 விபத்துகள்
துபாய்: இடியுடன் கொட்டிவரும் பேய் மழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது துபாய். கடந்த 7 மணி நேரத்தில் மட்டும் 253 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடான துபாய் உட்பட்ட ஐக்கிய அரபு குடியரசில் கடந்த சில மணி நேரங்களாக பேய் மழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தொடரும் என்று ஐக்கிய அரபு குடியரசு வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை நீடிப்பதால் துபாய் நகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
துபாயில் நேற்று வீசிய புயல் அதனைத் தொடர்ந்து கொட்டிய கனமழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 7 மணிநேரத்தில் 253 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் உதவி கோரி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கன மழை காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலையில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் பேய்க் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், இணைய பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன. அடுக்குமாடிகள்,நட்சத்திர விடுதிகள் எல்லாம் காற்று மழைக்கு தாக்குபிடிக்கமுடியாமல் ஜன்னல்கள்,கதவுகள் உடைந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

அல் பயானில் உள்ள புஜைரா பள்ளத்தாக்கில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கடலில் 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று சில பகுதிகளில் 110 மி.மீ அளவு மழை செய்துள்ளதாகவும், மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியதாகவும் ஐக்கிய அரபு குடியரசின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஐக்கிய அரபு குடியரசின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று பெருமளவு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். வியாழன் இரவு மழை அளவு குறைந்து வெள்ளிக்கிழமை நிலைமை சீராகும் எனவும் மையம் அறிவித்துள்ளது.
இடியுடன் கொட்டி வரும் மழையாலும், கடுமையான வெள்ளப்பெருக்கினாலும் துபாய்வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடரும் மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications