ஒரே நொடி.. மொத்தமாக சரிந்த அடுக்குமாடி கட்டிடம்.. தாய்லாந்தை உலுக்கிய பூகம்பம்! பதற வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு வலிமையான நிலநடுக்கங்கள் பதிவானது. அந்நாட்டில் சமீப ஆண்டுகளில் பதிவானதிலேயே இதுதான் வலிமையானது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்குப் பூகம்பத்தால் ஒரு மாபெரும் கட்டிடம் நொடிகளில் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

Earthquake Myanmar Thailand

நமது பூமியின் மேற்பரப்பு பார்க்க ஒரே போலத் தெரிந்தாலும், அது பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் கொண்டதாகும். இந்த டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போதுதான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. டெக்டோனிக் தட்டுகள் மோதும் நிகழ்வு நிலப்பரப்பில் ஏற்படும்போது பூகம்பமாக ஏற்படுகிறது. அதேநேரம் கடலில் ஏற்படும்போது அது சுனாமியாக இருக்கிறது.

Earthquake Myanmar Thailand

மியான்மர் நிலநடுக்கம்

இதற்கிடையே இப்போது தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11.50 மணியளவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 7.7ஆகப் பதிவாகியிருந்தது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சப்பட்டு ரோட்டிற்கு ஓடி வந்தனர்.

Earthquake Myanmar Thailand

2 பயங்கர பூகம்பங்கள்

முதலாவது நிலநடுக்கம் தாக்கிய அடுத்த சில நொடிகளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தின் மையப்பகுதி சாகைங் அருகே அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் வரை வலுவாகவே உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட இந்த பூகம்பம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Earthquake Myanmar Thailand

இந்த பூகம்பத்தால் மியான்மர் நாட்டில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், மேலும் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வீடியோக்கள்

இதற்கிடையே பூகம்பம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை உணர்த்தும் வகையிலான வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவா பாலம் சரிந்து விழும் வீடியோ நெட்டிசன்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மியான்மருக்கு இணையாகத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் மோசமாக இருந்துள்ளது.

சரிந்த கட்டிடங்கள்

அங்கு வான் உயர்ந்த ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்த சூழலில், பூகம்பத்தால் நொடிகளில் அந்தக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மேலும், பாங்காக்கில் பொதுவாகவே வான் உயர்ந்த கட்டிடங்களில் மேலே நீச்சல் குளங்களை வைத்திருப்பார்கள். நிலநடுக்கத்தால் அந்த நீச்சல் குளத்தில் இருந்தும் தண்ணீர் மொத்தமாக வெளியேறியுள்ளது. அந்தளவுக்கு வலிமையான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+