ஆஸி. அருகே பபுவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 7.1 ரிக்டரில் 'ஆப்டர்ஷாக்'!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ பிரிட்டன் தீவில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 680 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 48.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சக்திவாய்ந்த ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது.
நியூ பிரிட்டன் தீவில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த தீவு நாடு நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி கோகோபோ நகரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படவில்லை.
சுனாமி ஏற்படாவிட்டாலும் நில அதிர்வால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications