என்னாங்க இது அநியாயம்.. நம்ம ஊரு கோழிக் கறி விலைக்கு ஒரு முட்டை விலை! விழிபிதுங்கும் ஜப்பானியர்கள்!
டோக்கியோ: ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக முட்டையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அன்று முதல் கடந்த மாத காலம் வரை இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன.

மேலும் நோய் பாதிப்புடைய பறவைகள் இறந்தால் கூட புதைப்பதற்கு இடம் இல்லை என்ற நிலை உள்ளது. மற்ற பறவைகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அது போன்ற ஒரு முயற்சியை செய்து வருகிறது.
நோய் பாதித்த கோழிகளை ஆழமான இடத்தில் புதைக்க வேண்டும். ஆனால் இனியும் கோழிகளை புதைக்க இடம் இல்லை என்கிறார்கள். இதுவரை ஏற்படாத அளவிற்கு இங்கு பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதாக கூறுகிறார்கள். இந்த பறவைக் காய்ச்சல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் பரவியுள்ளது. இந்த பறவைக் காய்ச்சல் எதிரொலியால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது.
மெக்டொனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் முட்டையை கொண்டு செய்யப்படும் டிஷ்கள் செய்யப்படுவதில்லை. இறந்த கோழிகளில் 90 சதவீதம் முட்டையிடும் கோழிகள். கடந்த மாதம் தொடக்கத்தை வைத்து பார்த்தால் ஒரு முட்டையின் விலை 335 யென்னுக்கு விற்பனையானது. அதாவது ஒரு யென்னிற்கு இந்திய மதிப்பு 0.61 காசுகளாகும். அதன்படி 335 யென் என்றால் ஒரு முட்டை 204 ரூபாய்க்கு விற்பனையானது.
இப்படியே தினந்தோறும் விலையேற்றத்தை சந்திக்கும் இந்த ஜப்பானில் தற்போதைய நிலவரப்படி ஒரு முட்டையின் விலை ரூ 213 ஆகும். இதனால் மக்கள் ஆம்லெட், ஆஃப்பாயில் உள்ளிட்ட முட்டையை கொண்டு செய்யப்படும் டிஷ்களை தவிர்த்து வருகிறார்கள். அப்படியே முட்டையை வாங்கி ஆம்லெட் போட்டால் சமூகம் பெரிய இடம் என்று அர்த்தம். அதாங்க பணக்காரர் என்று அர்த்தம்!
இது போன்ற ஒரு விலை உயர்வு என்பது 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் உள்ளது. இதனால் ஹோட்டல்களிலும் முட்டை ரெசிபிகள் தயார் செய்யப்படுவதில்லை. அப்படியே அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதை யாரும் விரும்பி சாப்பிடவில்லை. விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் அந்த முட்டையில் ஏதேனும் பறவைக் காய்ச்சல் கிருமி இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிக்கனும் கிடைக்காமல் நிறைய பேர் மீன் உணவிற்கு மாறிவிட்டனர். ஒரு முட்டையை 213 ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக மீன் வகைகளை வாங்கி மனதாரவும் வயிறாரவும் சாப்பிடும் மனநிலைக்கு ஜப்பானியர்கள் வந்துவிட்டனர். தற்போது இருக்கும் நிலையில் அந்த முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்தால் அந்த கோழி குஞ்சுக்கு ப்ளூ வராமல் தடுக்க முடியுமா என்ற யோசனையிலும் சுகாதாரத் துறை இறங்கியுள்ளது.

நம்ம ஊர்ல சீசனின் போது வெங்காயம், தக்காளி விலை உயரும். அது போல் இங்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. இதனால் மீனை வைத்து ஆம்லெட் போடும் நிலைக்கு ஜப்பான் உணவகங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஜப்பானில் இருக்கும் குறைந்தது 6 மாதங்கள் வரையிலாவது முட்டை சார்ந்த உணவுகளை தவிர்க்க மக்களும் ஹோட்டல் நிர்வாகத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications