பசி, பட்டினியில் துடிக்கும் காசா மக்கள்.. உணவோடு உதவ போன எகிப்து! குண்டுபோட்ட இஸ்ரேல்.. ஷாக்
காசா: காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளது. இந்நிலையில் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மற்ற நாடுகள் உதவ வேண்டும் என எகிப்து எதிர்பார்த்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 2,000ஐ நெருங்கி வருகிறது. அதேபோல 4,000க்கும் அதிமானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படை செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளதால் காசா முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. மறுபுறம் எரிபொருள் இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை கூட பயன்படுத்த முடியவில்லை. மேலும் உதவி பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால் எகிப்தின் உதவி பொருட்கள் கொண்டு வந்த 70 லாரிகள் காசா எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மருந்துகள், குடிநீர், எரிபொருள், உணவு போன்றவை இந்த லாரிகளில் இருக்கின்றன. இதனை காசாவுக்கு அருகே 75 கி.மீ தொலைவில் உள்ள எல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தால் போதும். அங்கிருந்து எப்படியாவது காசாவுக்குள் இதை கொண்டு சென்றுவிடலாம். ஆனால் இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் மீதும் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. எனவே தன்னுடன் மற்ற நாடுகளும் உதவி பொருட்களை அனுப்பி வைத்தால்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாமல் இருக்கும் என எகிப்து நம்புகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications