For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற குட்டி நீர் மூழ்கி கப்பல்.. ஒரே இரவில் உருவாக்கிய எலோன் மஸ்க்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.

உதவ முன்வந்தார்

குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதுவழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தனர். இதற்காக எலோன் மஸ்க் களத்தில் குதித்து இருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர்தான் தன்னுடைய டெஸ்லா நிறுவன காரை செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு மாதம் முன்பு அனுப்பியது. அவர் இந்த பணியை செய்ய தயாரானார்.

பிரச்சனை என்ன?

தற்போது மீட்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மீட்பு குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில் தான் சிறுவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியை தாண்டி வர வேண்டும். இந்த பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தும் வேலை தற்போது நடந்து வருகிறது. ஆனால் இந்த வேலை மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது

பல்கான் ஹெவி 9

இதற்காக எலோன் மஸ்க் வேறொரு ஐடியாவை உருவாக்கி உள்ளார். அதன்படி குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய போகிறது

இது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க வைக்கலாம். இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இதை இப்போது சோதனை செய்து வருகிறார்கள். வெறும் 8 மணி நேரத்தில் இந்த மொத்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் சில நிமிடத்தில் தாய்லாந்து கொண்டு செல்ல உள்ளனர்.

English summary
Elon Musk's Space X team creates a mini-submarine for Thailand Cave Rescue operation in just 8 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X