கருப்புப் பண முதலைகள் - அம்பலப்படுத்த ஸ்விஸ் வங்கிகள் ஒப்புதல்

இது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்கார திமிங்கலங்கள்தான் ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதால் ஸ்விஸ் வங்கிகளின் இந்த முடிவு இந்தியாவில் உள்ள கருப்புப் பண முதலைகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்படி, இந்தியர்கள் அங்குள்ள வங்கிகளில் குவித்துள்ள கருப்புப் பணம் மட்டும் ரூ. 9000 கோடியாகும். இது 2012ம் ஆண்டு கணக்காகும். ஒட்டுமொத்தமாக ஸ்விஸ் வங்கிகளில் ரூ. 90 லட்சம் கோடி பணத்தைக் குவித்து வைத்துள்ளனர் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள்.
ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்போர் பெயர் விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகின்றன. அதை எந்த நாட்டுக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள் சட்டம் தெரிவிக்கிறது. இதனால்தான் ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களைப் பெற முடியாமல் தவித்தது மத்திய அரசு. ஆனால் தற்போது இந்த ரகசியங்களை அம்பலப்படுத்த சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்திருப்பதால் இந்தியாவுக்கு நிம்மதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் சுவிட்சர்லாந்து அரசு கையெழுத்திட்டுள்ளது. இதில் 58 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியாவும் ஒரு நாடாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி தங்களது நாட்டைச் சேர்ந்த யாரேனும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக அந்த நாடு சந்தேகிக்குமானால், அந்த நபர் ஸ்விஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பண விவரம் குறித்த விவரத்தை ஸ்விஸ் வங்கிகளிடம் கேட்கலாம். அவர்கள் அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications