பெருசா இருந்தாதான் கெத்து.. ரத்தம் குடித்து தொப்பை வளர்க்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா
எத்தியோப்பியாவின் போடி பழங்குடியின மக்கள் மத்தியில் தொப்பை வளர்க்கும் விநோத பழக்கம் உள்ளது.
அடிஸ் அபாபா: தொப்பையைக் குறைக்க இங்கு நாம் தலைகீழாக நின்று தோப்புக்கரணமே போடத் தயாராக உள்ள நிலையில், தொப்பை இருந்தால்தான் திருமணத்திற்கு பெண் கிடைப்பார்கள் என கஷ்டப்பட்டு தொப்பை வளர்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.. ஆம் எத்தியோப்பியா நாட்டில்தான் இப்படியொரு விநோதமான பழக்கம் நடைமுறையில் உள்ளது.
வயதுகூடக்கூட தொப்பை வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதிலும் சமீபகாலமாக நமது உணவுப்பழக்க வழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணிகளால் இளவயது.. அட குழந்தைகளுக்குக்கூட தொப்பை வந்து விடுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தொப்பை வளரும்போது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, பின்னர் அது சட்டை பட்டன் தெறிக்கும் அளவிற்கு வந்த பிறகு, அதனைக் குறைக்க காலையில் ஓடுவது, மாலையில் ஓடுவது என வாழ்க்கையின் எல்லை வரை ஓடினாலும் தொப்பை குறையாது சிலருக்கு. பிறகென்ன தொப்பையோடு வாழப் பழகி விடுவார்கள்.

வளர்க்கப்படும் தொப்பை
ஆனால் எது எப்படியோ திருமண சமயத்தில் தொப்பையோடு இருப்பதை மாப்பிள்ளையாகட்டும், மணப்பெண்ணாகட்டும் விரும்பவே மாட்டார்கள். தொப்பையில்லாமல் இருந்தால்தான் தாங்கள் அழகாக இருப்பதாகவே அவர்கள் கருதுவார்கள். ஆனால் இந்தக் கதையெல்லாம் இங்குதான். எத்தியோப்பியாவில் நிலையே வேறு. அங்கு திருமணத்திற்காக என்றே ஸ்பெஷலாக தொப்பை வளர்க்கிறார்களாம் ஆண்கள்.

தொப்பைக்கு மவுசு
ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த போடி என்ற பழங்குடியினர்களின் மத்தியில் தான் இந்த வினோத பழக்கம் உள்ளது. எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் வாழும் இவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி தொப்பை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்களாம். காரணம் அங்கு தொப்பை வளர்த்து கொழுக் மொழுக் என இருக்கும் ஆண்களைத் தான் திருமணம் செய்து கொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதுதான்.

சிறப்பு உணவு
நன்கு பெரிய தொப்பையைக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பழங்குடியினர்களுக்கு இடையே நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமாம். அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கும் என்பதாலேயே தொப்பையை வளர்க்க அவர்கள் பல சிறப்பு உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கது, தினமும் இரண்டு லிட்டர் பசும்பாலில் ரத்தம் கலந்து குடிப்பது.

ரத்தம் கலந்த பால்
சிலர் இன்னும் ஒருபடி போய், பசுவின் ரத்தத்தையே அப்படியே குடிப்பார்களாம். இதற்காக பசுவை அவர்கள் கொல்ல மாட்டார்களாம். அதற்கு மாறாக அதன் உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் வழியாக ரத்தத்தைப் பெற்று குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி தொப்பையை வளர்ப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட மற்றொரு காரணமும் உள்ளது.

இதுதான் காரணம்
அதாவது இங்கு திருமணமாகாத ஆண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொப்பை போட்டி என்று பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்காக ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராக ஆரம்பித்து விடுகின்றனர் இங்குள்ள இளைஞர்கள். போட்டி நாளன்று யாருடைய தொப்பை பெரிதாக இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர். அவரை திருமணம் செய்து கொள்ள அங்குள்ள பெண்கள் போட்டி போடுவார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications